கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க
Page 1 of 1
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க
கோடை கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெயில் காலத்துக்கென உணவுமுறைகளில் மாற்றம் செய்தால் உடலை குளிர்ச்சியாக வைக்க முடியுமா
பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்டெல்லா
கோடை காலத்தில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். அதிக அளவு திரவங்களை அருந்துங்கள். பழரசங்கள், காய்கறி ஜூஸ் ஆகியவை வெயிலை விரட்ட உதவுவதோடு, உடலுக்கு ஊட்டமும் அளிக்கும். சாதா டீ, காபிக்கு பதிலாக மூலிகை டீ அல்லது சூப் அருந்துவது நல்லது.
கொத்தமல்லி, இஞ்சி, மிளகு ஆகியவற்றை உணவில் சேர்ப்பது குளிர்ச்சியைக் கூட்டும். சுக்கு, லவங்கம் ஆகியவை வெதுவெதுப்பைத் தரும்.
சமைக்காத மற்றும் ஆவியில் வெந்த உணவே கோடைக்கு உகந்தது. டீப் ஃப்ரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கீரை வகைகள், இலைக்காய்கறிகள், முள்ளங்கி, வெள்ளரி, தக்காளி ஆகியவை கோடை உணவில் இடம் பிடிக்கட்டும். இரு உணவுகளுக்கு இடையே பழங்கள் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம். பாகற்காய்க்கு குளிர்ச்சி மற்றும் சுத்திகரிப்புத் தன்மை உண்டு.
கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்கள் சத்தும் குளிர்ச்சியும் தரும். வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கீரை, பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி சூப் தயாரித்து அருந்துவது தாதுச்சத்தையும் குளிர்ச்சியையும் தரும்.
ராஜ்மா, லிமா பீன்ஸ், பாசிப்பருப்பு ஆகியவையும் கூலிங் தரும். இறைச்சி அதிக சூடு என்பதால் கோடையில் மீனுக்கும் காய்கறிகளுக்கும் மாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்தில் உடலை குளிர்விக்க இதோ டிப்ஸ்!!
» கோடை காலத்தில் நீங்கள் உண்ணவேண்டிய உணவுவகைகள்.
» கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க
» கோடை வெப்பத்தை தணிக்க...
» கோடை கால சரும பாராமரிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum