தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சருமப் புற்றுநோயை உண்டாக்கும் டாட்டூ!

Go down

சருமப் புற்றுநோயை உண்டாக்கும் டாட்டூ! Empty சருமப் புற்றுநோயை உண்டாக்கும் டாட்டூ!

Post  ishwarya Thu Feb 28, 2013 12:34 pm

ஷ்ரேயா, மோனிஷா, ப்ரீத்திகா, ஷஷாங் நால்வரும் உறவுக்காரப் பிள்ளைகள். பெரும்பாலும் ஒற்றுமையாகவே இருக்கிற இவர்களுக்குள் ஒரே ஒரு

விஷயத்தில்தான் சண்டையில் மண்டை உடையும். அது, டாட்டூ கலெக்ஷன்! யாரிடம் அதிக டாட்டூ இருக்கிறது, யாருடையது லேட்டஸ்ட்

என்பதில்தான் பிரச்னையே...

'ஆசைப்படுகிறார்களே என்று வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கிற விஷயமில்லை இது. அளவுக்கு மிஞ்சினால், குழந்தையின் பிஞ்சு சருமம் பாதிப்புக்கு

உள்ளாகலாம், ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கிறார் சரும மருத்துவரும், அழகு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அஃடாப் மதீன்.

குழந்தைகள் உலகில் பரபர ஃபேஷனாக பரவி வருகிறது டாட்டூ ஸ்டிக்கர்ஸ். முகம், கழுத்து, கை, கால், வயிறு, முதுகு என வெளியே தெரிகிற

உடலின் எல்லா இடங்களிலும் டாட்டூ ஒட்டிக்கொள்வது குட்டீஸுக்கு பிடிக்கிறது.

பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து, சாக்லெட், சிப்ஸ் என குட்டீஸ்களுக்கான நொறுக்குத்தீனி பலவற்றுடனும் இலவசமாக வருகிறது டாட்டூ ஸ்டிக்கர்ஸ்.

விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், கார்ட்டூன்
கேரக்டர்ஸ் எனக் குழந்தைகளுக்குப் பிடித்த உருவங்களைத் தாங்கி வருகிற இந்த ஸ்டிக்கர்களுக்கு குட்டீஸ் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு. இலவச

ஸ்டிக்கர்களுக்காகவே நொறுக்குத் தீனி வாங்கும் குட்டீஸ் அதிகம் என்பது அனேக அம்மாக்களின் புலம்பல்! டாட்டூ வேண்டும் எனப் பிடிவாதம்

பிடிக்கிற குழந்தைகளைவிட, அவற்றை ஒட்டிக் கொண்ட குட்டீஸின் உடம்பிலிருந்து அழிய மறுக்கும் பசையின் பிடிவாதமே அதிகம். நான்கு நாள்

ஆனாலும், எத்தனை சோப் போட்டுத் தேய்த்தாலும், ‘போவேனா பார்’ என அடம் பிடிக்கும்!

குழந்தைகள் மத்தியில் இவற்றுக்குப் பெருகும் ஆதரவு தெரிந்து, புத்தக வடிவிலும், கத்தை கத்தையாகவும் தனி விற்பனையிலும் தூள் பறக்கிறது

டாட்டூ ஸ்டிக்கர்ஸ்.

‘‘டாட்டூ ஸ்டிக்கர்ல உள்ள பசை, ‘லேடக்ஸ் அலர்ஜி’யை உருவாக்கலாம். அதுல ‘ஃபார்மால்டிஹைடு’ங்கிற கெமிக்கல் இருக்கு. அதுதான்

அலர்ஜிக்கான காரணம்.

இப்ப கருப்பு, சிகப்பு, பச்சை, ஊதா, சில்வர்னு என்னென்னவோ கலர்கள் சேர்த்து, பளபளக்கிற எஃபெக்டுல டாட்டூஸ் கிடைக்குது. இப்படி டாட்டூல

சேர்க்கப்படற ஒவ்வொரு கலர்லயும் ஒரு கெமிக்கல் இருக்கு. உதாரணத்துக்கு கருப்புல லெட் ஆக்சைடு, சிகப்புல மெர்க்குரி சல்ஃபைடு, ஊதா நிறத்துல

குரோமியம் அயோடைடு, பச்சைல காப்பர் சல்ஃபைடு, சில்வர்ல அலுமினியம் குரோமேட்... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொரு

கெமிக்கலுக்கும் பாதிப்பை உண்டாக்கக் கூடிய குணம் உண்டு. குறிப்பா சில்வர் கலரை கொடுக்கக் கூடிய அலுமினியம் குரோமேட்டை அடிக்கடி

உபயோகிச்சா, சருமப் புற்றுநோய் வரக்கூடிய அபாயங்கள் அதிகம்.

வெறுமனே ஸ்டிக்கர் டைப்ல ஒட்டக் கூடிய டாட்டூகள்ல மட்டுமில்லாம, வரையற டாட்டூகளும் அலர்ஜிக்கு விதிவிலக்கு இல்லை. இந்த மாதிரி

டாட்டூகள்ல கலர் நல்லா சருமத்துக்குள்ள ஊடுருவணும்னு காட்லிவர் எண்ணெய் உபயோகிப்பாங்க. மீன், மீன் பொருள்கள் அலர்ஜி உள்ளவங்களுக்கு,

இது படு பயங்கரமான பிரச்னைகளை உண்டுபண்ணிடும். அதாவது மூச்சுத் திணறல், முகம் வீங்கறதுனு அந்த பாதிப்புகள் கடுமையாகவே இருக்கும்.

சிலருக்கு டாட்டூ ஒட்டும்போதோ, வரையறபோதோ அலர்ஜி தன்னோட அறிகுறிகளைக் காட்டும். அரிப்பு, சருமம் சிவந்து, தடித்துப் போறதெல்லாம்

இருக்கும். சிலருக்கு 1 மணி நேரத்துல தெரியலாம். இன்னும் சிலருக்கு வெயில்ல போறப்ப அலர்ஜி வரலாம். பிக்மென்ட்டேஷன்னு சொல்லக்கூடிய

கருமையான படலம், பொரி பொரியா வர்றது, சீழ் பிடிக்கிறதுனு அந்த அறிகுறிகள் எப்படி வேணா இருக்கலாம்.

அலர்ஜி இருக்கிறது தெரிஞ்சா, உடனடியா வாசலின் அல்லது மாயிச்சரைசர் தடவி, டாட்டூவை எடுக்கணும். உடனடியா சரும மருத்துவரைப்

பார்க்கணும். அவங்க ஆன்ட்டி அலர்ஜிக் கிரீமும், அலர்ஜிக்கான மருந்துகளையும் கொடுப்பாங்க.

குழந்தைங்களோட சருமம் ரொம்ப சென்சிட்டிவானது, மென்மையானது. அதுல எந்தவித கெமிக்கலும் படாம இருக்கிறதுதான் பாதுகாப்பானது. டாட்டூ

ஒட்டிக்கிறதும், வரைஞ்சுக்கிறதும் தற்காலிகமா அவங்களுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், தொடர்ந்து உபயோகிக்கிறப்ப, அவை உண்டாக்கிற

பின் விளைவுகள் பயங்கரமானவை. அதை எடுத்துச் சொல்லிப் புரியவைக்கிற பொறுப்பு பெற்றோருக்கு அவசியம்’’ என்கிறார் டாக்டர் அஃடாப் மதீன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum