சருமப் பிரச்சனைகளை தடுக்கும் வேப்பிலை ஃபேஸ் பேக்...
Page 1 of 1

Neem Face Packs For A Flawless Skin
வேப்பிலை ஒரு கிருமிநாசினி செடி. இந்த செடியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இந்த வேப்பிலையானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. அக்காலத்தில் சூடான நீரில் சிறிது வேப்பிலையை போட்டு குளிப்போம். இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு இயற்கைப் பொருள்.
மேலும் இந்த வேப்பிலை நிறைய அழகுப் பொருட்களான க்ரீம், லோசன் மற்றும் ஷாம்புக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிலும் இதல் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பழுப்பு நிறத்தோல் போன்றவற்றை சரிசெய்யும். இப்போது இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளலாமே!!!
வேப்பிலை: கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். இதனால் முகத்தில் இருக்கும் சிவப்புநிறம், அரிப்பு மற்றும் தழும்புகள் போன்றவை குணமாகும்.
வேப்பிலை, எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்: முகப்பரு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஃபேஸ் பேக். அதற்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்களை குறைக்க முடியும்.
வேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு: வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.
வேப்பிலை, கடலை மாவு மற்றும் தயிர்: வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்ததாக இருக்கும். இதற்கு ஒரு பௌலில் ஒரு டீஸ்ழுன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது அரைத்த வேப்பிலையை போட்டு கலந்து, தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதோடு, சருமம் மென்மையாகவும் மாறும்.
வேப்பிலை மற்றும் பால்: சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வேப்பிலை, துளசி மற்றும் தேன்: ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிம்பிள், பருக்கள் போன்றவற்றை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.
இவையே வேப்பிலையை வைத்து சருமத்திற்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள். வேறு ஏதாவது வேப்பிலையை வைத்து செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum