தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோய்த் தொற்று ஏற்படுத்தும் டாட்டூ

Go down

 நோய்த் தொற்று ஏற்படுத்தும் டாட்டூ  Empty நோய்த் தொற்று ஏற்படுத்தும் டாட்டூ

Post  ishwarya Wed Feb 27, 2013 1:41 pm

‘டாட்டூ போடுவதால் பல நோய்கள் வருகின்றன. எய்ட்ஸ்கூட தொற்றலாம் என்கிறார் ராணுவ உயர் அதிகாரி ஒருவர். நிஜமாகவே டாட்டூக்களுக்குப் பின்னால் ஆபத்து இருக்கிறதா? அதை அறிய கிளம்பினோம்... சென்னை மயிலாப்பூரில் உள்ள மஹா பியூட்டி பார்லர். வயது வித்தியாசமின்றி விதவிதமான உருவங்களை தங்கள் உடம்பில் குத்திக்கொண்டிருந்தனர் டாட்டூ பிரியர்கள். ‘‘நீங்களும் குத்திக்கறீங்களா?’’ என்றபடி வரவேற்றார் உரிமையாளர் மஹாலட்சுமி.

‘‘தரமான புது நீடில், தரமான கலர்ஸ்... இதெல்லாம் வச்சு சரியான முறைப்படி டாட்டூ போட்டுக்கும்போது ஒரு பிரச்னையும் இல்லை. இப்போவெல்லாம் குழந்தைங்க கூட பவர் ரேஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன்னு கார்ட்டூன் கேரக்டர்ஸை வரைஞ்சுக்க வர்றாங்க. இளைஞர்கள் பெரும்பாலும் மனசுக்குப் பிடிச்சவங்க பேரை நெஞ்சுல எழுதச் சொல்லிக் கேக்கறாங்க.

மாடலிங் செய்யறவங்க இடுப்பு, கழுத்து, கால்ல டாட்டூ போட்டுக்கிட்டா, கேட் வாக் செய்யும்போது அழகா இருக்கும். மணப்பெண்களுக்கு முதுகுலயும் கையிலயும் போட்டா, வீடியோல அழகாத் தெரியும். இளம்பெண்கள் சில பேர் அழகுக்காக உதட்டு மேல மச்சம் இருக்குற மாதிரி டாட்டூ வச்சிக்கறாங்க. இப்படி மச்ச சைஸ்ல தொடங்கி உடம்பு முழுக்க போடுற சைஸ் வரை நிறைய டாட்டூ டிசைன்ஸ் இருக்கு. சிவப்பு, நீலம், ரோஸ், ஆரஞ்சு, பச்சைன்னு பல கலர்ஸ்ல போடலாம். வேண்டாம்னு நினைச்சா, லேசர் முறையில ரிமூவ் பண்ணிடவும் முடியும். முன்னாடியெல்லாம் டாட்டூ போட்டுக்கறவங்களுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கறதுல சிக்கல் இருந்தது. இப்போ அதுகூட இல்லை’’ என்றார் மஹாலட்சுமி.

சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரான டாக்டர் பிரியாவிடம் இதுபற்றிக் கேட்டோம்...

‘‘டாட்டூ போடுவதில் பயிற்சி உள்ளவர்கள், ஊசி உள்ளிட்ட தரமான உபகரணங்கள், ஆபத்து விளைவிக்காத நிறங்கள்... இதில் ஏதாவது ஒன்று தவறினாலும் நோய் தொற்றும் ஆபத்து இருக்கிறது. புதிய ஊசியை பயன்படுத்தாவிட்டால், foreign body granu loma என்கிற ஒருவித தோல் அலர்ஜி ஏற்பட்டு, அந்த இடத்தில் கட்டி போன்று வீங்கிக்கொள்ளும். பின்பு அந்த இடமே புண்ணாகி விடும். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தும்போது, வைரஸ் தொற்றும் ஏற்படலாம். சாதாரண நோய்த் தொற்றுகள் மட்டுமின்றி, ஹெபடைடிஸ் பி, சி, எச்.ஐ.வி போன்ற ஆபத்தான நோய்கள் கூட தொற்றலாம்.

சர்க்கரை நோயாளிகள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டாட்டூ போட்டுக்கொள்ளும்போது, அந்த இடத்தில் அரிப்பு, நமைச்சல் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் சிறிய அளவில் போட்டுப் பார்த்து, அலர்ஜியை சோதிப்பது அவசியம். டாட்டூவை அகற்ற இப்போது லேசர் சிகிச்சை உள்ளது. ஆனால் அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதோடு, மாதத்திற்கு ஒரு முறை என ஆறிலிருந்து பத்து முறையாவது அந்த சிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் 80 முதல் 90 சதவீதம் மட்டுமே மறையும். அதிலும் ஆரஞ்சு, மஞ்சள் நிற டாட்டூக்களை அழிப்பது அத்தனை சுலபமல்ல.

டாட்டூ போட பயன்படுத்தப்படும் நிறங்களை பிக்மென்ட் (Pigment) என்பார்கள். நம் நாட்டில் உபயோகப்படுத்தப்படும் பலவித பிக்மென்ட்களுக்கு முறையான அனுமதியே இல்லை எனலாம். பிரின்டிங் இங்க்குகளையே டாட்டூவுக்கும் பயன்படுத்துகிறார்கள். AZO என்ற பிக்மென்ட்டைப் பயன்படுத்திப் போட்ட டாட்டூவை லேசர் சிகிச்சையில் அகற்றும்போது, அது கரையும் நிலையில் சில நச்சுக்களை உருவாக்கும். இதனால் கேன்சர் வரும் ஆபத்தும் இருக்கிறது’’ என்று எச்சரிக்கிறார் பிரியா.

‘‘கல்லூரி மாணவர்கள் பலர் தங்கள் காதலியின் பெயரை டாட்டூவாக எழுதிக்கொள்கிறார்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரியும்போது, அந்தப் பெயரை அழிக்கச் சொல்லி நிறைய பேர் வருகிறார்கள். தரமற்ற பிக்மென்ட்களால் டாட்டூ போட்டிருந்தால், அதனை அழிப்பது கடினம். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் BIORESORBABLE வகை பிக்மென்ட்டில் கரையும் தன்மை அதிகமிருப்பதால், அதில் போடும் டாட்டூக்களை எளிதாக அழித்துவிட முடியும். இது எதுவுமே தெரியாமல் நம்மவர்கள் டாட்டூவைப் போட்டுக் கொள்கிறார்கள். அதன் பின் விஷயம் தெரிந்து பலர் அவதிப்படுகிறார்கள்’’ என்று எச்சரிக்கிறார் அவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum