தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டாட்டூ சில ஆலோசனை

Go down

டாட்டூ சில ஆலோசனை Empty டாட்டூ சில ஆலோசனை

Post  ishwarya Thu Feb 28, 2013 12:29 pm

சென்னையில் உள்ள ‘தாலிஸ்மன்’ டாட்டூ சென்டரின் உரிமையாளர்களில் ஒருவரான நிஷா, சென்னையின் முதல் பெண் டாட்டூ ஆர்ட்டிஸ்ட். அவர் சொல்லும் சில ஆலோசனை!

‘டெம்ப்ரரி டாட்டூ, பர்மனன்ட் டாட்டூனு இதுல ரெண்டு வகை இருக்கு. பல இடங்கள்லேயும் தற்காலிக டாட்டூ போட ஹேர் டை உபயோகிக்கிறாங்க. அது சருமத்துல ஒரு வாரம் வரை இருக்கும். டாட்டூ அழிஞ்ச பிறகும்கூட, டையோட சாயம் அப்படியே இருக்கும். அதனால நாங்க டெம்ப்ரரி டாட்டூ போடறதில்லை. ஜெர்மன் லேப்ல டெஸ்ட் பண்ணி, தரமானதுங்கிற சான்றோட வர்ற இங்க்கை வச்சு, பர்மனன்ட் டாட்டூதான் போடறோம்.

முன்னே எல்லாம் சின்ன வயசுக்காரங்களும், மீடியா ஆளுங்களும்தான் டாட்டூ போட்டுக்குவாங்க. இப்ப ஐடியில வேலை பார்க்கிறவங்க, ஹவுஸ்ஒயிஃப்னு எல்லாருமே விரும்பறாங்க. டிராகன், கழுகுனு கரடு, முரடான டிசைன்களை பசங்களும், பட்டாம்பூச்சி, பூக்கள், சமஸ்கிருத எழுத்துகள்னு மென்மையான டிசைன்களை பொண்ணுங்களும் விரும்பறாங்க...’’ என்கிற நிஷா, காதலன் அல்லது காதலி பெயரை டாட்டூவாக போடச் சொல்லி வருவோருக்கு நீண்ட அட்வைஸ் செய்து மனதை மாற்றப் பார்க்கிறார்.

‘‘நிறைய பேர், குறிப்பா பொண்ணுங்க, ஏதோ ஒரு சென்டிமென்ட்ல, ஆர்வக் கோளாறுல காதலர் பேரை டாட்டூ போடச் சொல்லிக் கேட்கறாங்க. துரதிர்ஷ்டவசமா அந்தக் காதல் முறிஞ்சு போகறப்ப, அந்த டாட்டூவை அழிக்க முடியாம, காலத்துக்கும் உறுத்தலோட வாழற நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப் படறாங்க. கணவன் அல்லது குழந்தைங்க பேர்னா தாராளமா பண்ணிக்கட்டும். நிச்சயமில்லாத காதலன் பேர் வேணாமே’’ என்கிற நிஷா, டாட்டூ போட்டுக் கொள்ளும் முன்பும், பிறகும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களையும் தெளிவுப்படுத்துகிறார்.

‘‘தரமான இடங்கள்ல, அனுபவமுள்ள நபர்கள்கிட்ட போட்டுக்கிறது நல்லது. டயப்பட்டீஸ் இருக்கிறவங்க, டாட்டூ போடறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட அட்வைஸ் கேட்டுக்கிறது பாதுகாப்பானது. ஃபேஷனுக்கேத்தபடி அடிக்கடி மனசை மாத்திக்கிறவங்களுக்கு இது சரியா வராது. அதனால போடறதுக்கு முன்னாடி நிறைய யோசிக்கணும். டாட்டூ போட்டதும், முதல்ல அந்த இடம் கருப்பா இருக்கும். காயக் காய பச்சையா மாறும். முதல் மூணு நாளைக்கு டாட்டூ மேல ஆயின்மென்ட் தடவணும். காயாம இருக்க, பேபி ஆயில் தடவணும். வெயில் படக்கூடாது.

நீச்சலடிக்கக்கூடாது. சோப் போடக்கூடாது. இரண்டு வாரங்கள்ல ஓரளவுக்கு ஆறியிருக்கும். அதாவது அடிபட்ட புண் காய்ஞ்ச மாதிரி இருக்கும். முழுக்க சரியாக ஒரு மாசம்கூட ஆகலாம். பெரிய டிசைன் போடறவங்களுக்கு லேசா காய்ச்சல் வரலாம். அதுக்காக பயப்பட வேண்டாம். வயிறு, இடுப்பு மாதிரி இடங்கள்ல டாட்டூ போட்டுக்கிறதை நிறைய பெண்கள் விரும்பறாங்க. கர்ப்பமாகி, வயிறும் இடுப்பும் பெரிசாகறப்ப, அந்த இடம் விரிஞ்சு, டாட்டூவோட வடிவமே மாறிப் போகலாம். அதனால கல்யாணமாகாத பெண்கள் அதைத் தவிர்க்கிறது பெட்டர்...’’ அட! டாட்டூவில் இத்தனை விஷயங்களா என வியக்கும் அதே வேளையில், ஆபத்துக்களையும் எடுத்துரைக்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.


‘‘ஒருசில மணி நேர வலியைப் பொறுத்துக்கிட்டா, நீங்களும் ஒரு டாட்டூவுக்கு சொந்தக்காரர். ஆனா, அதுக்கு முன்னாடி உண்மையிலேயே அந்த டாட்டூ அவசியம்தானானு பல முறை யோசியுங்க. ஏன்னா டாட்டூ மட்டுமில்லை, சில நேரம் அது உண்டாக்கும் பக்க விளைவுகளும் நிரந்தரமா உங்க கூடவே தங்கிடலாம்...’’ எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் அவர். ‘‘டாட்டூங்கிறது உங்க சருமத்தோட மேல் லேயர்ல, ஊசிகள் மூலமா பிக்மென்ட்டுனு சொல்லப்படுகிற நிறமிகளைச் செலுத்தி, நிரந்தர வடிவத்தை உண்டாக்கிறது.

ஒவ்வொரு முறையும் உங்க சருமத்துல குத்தறப்ப, ஊசி மூலமா துளித்துளியா இங்க் உள்ளே இறங்கும். மயக்க மருந்தோ, மரத்துப் போகற விஷயங்களோ இல்லாம அப்படியே செய்யப்படுகிற விஷயம். வலியையும், சிறிதளவு ரத்த இழப்பையும் சகிச்சுக்கிட்டுத்தான் ஆகணும். இதுக்கெல்லாம் தயார்னு நினைக்கிறவங்க, டாட்டூவால ஏற்படக்கூடிய சில ரிஸ்க்குகளையும் மனசுல வச்சுக்கிறது நல்லது” என்கிற டாக்டர் செல்வி, அவற்றைப்பட்டியலிடுகிறார்.

‘‘டாட்டூவுக்காக உபயோகிக்கிற சிகப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிற டை வகைகள் சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம். டாட்டூ போட்ட இடத்துல அரிப்பு வரலாம். இது டாட்டூ போட்டு பல வருஷங்கள் கழிச்சும் வரலாம். சருமத்துக்குள்ள அந்நியப் பொருள்கள் ஊடுருவறதால உண்டாகக்கூடிய ‘கிரானுலோமா’ பிரச்னையும் வரலாம். ஒரு இடத்துல அடிபட்டா, அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமா ஆறும்.

டாட்டூ உண்டாக்கிற காயம், சிலருக்கு அந்த இடத்தைச் சுத்தின தழும்புத் திசுக்களோட வளர்ச்சி அதிகமாகிற ‘கீலாயிட்ஸ்’ பிரச்னையையும் ஏற்படுத்தலாம். டாட்டூ போட உபயோகிக்கிற கருவிகள் முறையா ஸ்டெரிலைஸ் செய்யப்படாத பட்சத்துல ரத்தம் தொடர்பான டெட்டனஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, ஹெச்.ஐ.வி போன்ற தொற்று நோய்களும் வரலாம்.

டாட்டூ போட்டுக்கிட்டவங்களுக்கு ஏதோ காரணத்துக்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டி வருதுனு வச்சுப்போம். டாட்டூவோட இங்க் கலர் காரணமா, எம்.ஆர்.ஐ.யோட பிரின்ட் அவுட் தெளிவா வராமப் போகலாம். டாட்டூ போட்ட இடத்துலேயோ, அதுக்குப் பக்கத்துல உள்ள பகுதிகள்லேயோ அலர்ஜியோ, இன்ஃபெக்ஷனோ வந்தா, உடனடியா சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தேவைப்பட்டா, அந்த டாட்டூவை நிரந்தரமா நீக்கவும் வேண்டியிருக்கும்’’ என்கிறார் டாக்டர் செல்வி எச்சரிகை தொனியில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum