உஷார்... மெட்ராஸ் ஐ பரவுது!
Page 1 of 1
உஷார்... மெட்ராஸ் ஐ பரவுது!
வெயில் காலம் வந்துவிட்டாலே, சருமத்தில் கட்டி, உடல் உஷ்ணம் போன்ற பிரச்னைகள் ஒவ்வொன்றாக தலை தூக்கும். அதில் முக்கியமான பிரச்னை கண்நோய் என்கிறார் சங்கரா கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையத்தின் கண் நிபுணர்‘வெயில் காலத்தில் கண்களில் அலர்ஜி மற்றும் இன்பெக்ஷன் மிகவும் சாதாரணமான நோய்.
கண்களில் அலர்ஜி ஏற்பட முக்கிய காரணம் காற்றில் பரவி இருக்கும் பூக்களின் மகரந்த துகள்கள் மற்றும் கண்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனங்கள். பூக்களில் உள்ள மகரந்தம் கண்களில் படுவதால் கண் எரிச்சல், அரிப்பு மற்றும் கண்கள் சிவந்து போகும். தரமற்ற அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது ஒரு சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும். இதனை போக்க ஆன்டி அலர்ஜி கண் சொட்டு மருந்துக்கள் உள்ளன.
இதனை பயன்படுத்தினால் கண்களில் ஏற்பட்ட அலர்ஜி 2 நாட்களில் குணமாகிவிடும். கண்களில் அலர்ஜி இருந்தால் கண்களை கை விரல்களால் தேக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் கண் எரிச்சலை மேலும் அதிகரிக்கும்‘ என்று சொன்னவர் பாக்டீரியா மற்றும் வைரஸ் இன்பெக்ஷன் காரணமாகவும் கண்களில் பிரச்னை ஏற்படும் என்றார்.
‘வெயில் காலத்தில் பூமி வறண்டு இருப்பதால் எங்கும் தூசி பரவி இருக்கும்.காற்றில் பரவி இருக்கும் தூசியில் பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் இருக்கும். இவை கண்களை தாக்கும் போது கண்களில் பாதிப்பு ஏற்படும். இது மற்றவருக்கு பரவும் என்பதால், பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தும் கைக்குட்டை, டவல், தலையணை எதையும் பயன்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது.
அதே சமயம் ஒரு கண்ணில் பாதிப்பு இருந்து அதை கைகளால் தொட்டு மற்ற கண்ணை தேய்த்தால் அது அடுத்த கண்ணையும் தாக்கும். 2 நாட்கள் கண்கள் சிவப்பாக இருக்கும். ஆன்டிபயாட்டிக் கண் மருந்தினை பயன்படுத்தினால் குணமாகும். சில சமயம் இந்த இன்பெக்ஷன் கண்களில் கார்னியா பகுதியை பாதிக்கும். இதனால் கண்பார்வை பாதிக்காது. ஆனால் குணமாக ஒரு வாரமாகும்‘ என்றார்.
வெயில் காலத்தில் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்...
காற்றில் பரவி இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது. ஆனால் இது கண்களை தாக்காமல் பாதுகாக்கலாம்.
வெளியே செல்லும் போது கண்களுக்கு குளுகுளு கண்ணாடி அணிந்து செல்வது நல்லது. குறிப்பாக இரண்டு சக்கர வாகனயோட்டிகள் இதனை பயன்படுத்த வேண்டும்.
அழுக்கு கைகளால் கண்களை தேய்க்க கூடாது. வெளியே சென்று வந்தவுடன் சோப்பு கொண்டு முகம், கை மற்றும் கால்களை கழுவ வேண்டும்.
வெயில் காரணமாக கண்களில் உள்ள நீர் சுரப்பு காய்ந்து போகும் வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க லூப்ரிகேஷன் சொட்டு மருந்தை டாக்டரின் ஆலோசனை பெயரில் பயன்படுத்தலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரவுது எலி காய்ச்சல் உஷார்!
» கடல் பட பிரச்னை மெட்ராஸ் டாக்கீஸ் விளக்கம்
» தெலுங்குப் படப்பிடிப்புகளுக்கு மெட்ராஸ் தான் பெஸ்ட் -மோகன்பாபு
» ராஜீவ் கொலை பின்னணியில் மெட்ராஸ் கஃபே
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum