தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலுறுப்பு மூலம் பரவும் எய்ட்ஸ் வைரஸ்

Go down

பாலுறுப்பு மூலம் பரவும் எய்ட்ஸ் வைரஸ் Empty பாலுறுப்பு மூலம் பரவும் எய்ட்ஸ் வைரஸ்

Post  meenu Thu Feb 28, 2013 12:15 pm

ஆண், பெண் உடலுறவின் போது எய்ட்ஸ் வைரஸானது பெண்களின் பாலுறப்பு மூலம் ஊடுருவி பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வாஷிங்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆரோக்கியமான பெண்ணின் பாலுறுப்பு திசுக்கள் மூலம் பரவும் எய்ட்ஸ் வைரஸ், அடுத்த 4 மணி நேரத்தில் ஹெச்ஐவி செல்களை பரப்புவது கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாலுறவுப் புணர்ச்சியின் போது ஹெச்ஐவி வைரஸ் கிருமி, பெண்களின் பாலுறுப்பு திசுவைத் தாண்டிச் செல்லமுடியாது என்று ஏற்கனவே கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வின் அடிப்படையில், பாலுறுப்பு தடையையும் தாண்டிச் செல்லக்கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெய்ன்பெர்க் மருத்துவக் கல்வி நிலையம் நடத்திய ஆய்வின்படி, எய்ட்ஸை பரப்பக்கூடிய வைரஸ் ஊடுருவக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு எதிர்பாராத அதே நேரத்தில் முக்கியமான முடிவாக அமைந்துள்ளது என்று ஆய்வுக்குத் தலைமை வகித்த தாமஸ் ஹோப் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாலுறுப்பு மூலம் எவ்வாறு ஹெச்ஐவி பரவுகிறது என்பதற்கான தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும், அந்த வைரஸ் எவ்விதம் செயல்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum