கருத்தடைகளை நிறுத்துவதற்கான காலம்
Page 1 of 1
கருத்தடைகளை நிறுத்துவதற்கான காலம்
புதிதாக திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், ஒரு குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தாலும் தற்போது குழந்தைப் பேறைத் தள்ளிப் போடுவதற்கான கருத்தடை சாதனங்கள் பல வந்துவிட்டன.
காப்பர் டி, மாத்திரைகள், ஆணுறை, பெண் உறை, ஊசி போன்று ஏராளமான சாதனங்கள் கருத்தடைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவரும் அவரது உடல் ஏற்றுக் கொள்ளும் ஒரு கருத்தடை முறையை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.
அதே சமயம், கருத்தடை சாதனத்தை நிறுத்தி விட்டு குழந்தைப் பேறுக்கு தயாராகும் தம்பதிகள், தாம் பயன்படுத்தும் கருத்தடை சாதனத்தை கருத்தரிப்பதற்கு எத்தனை மாதங்களுக்கு முன்பாக நிறுத்தி விட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
நீங்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால் நீங்கள் கருவுற முயற்சி மேற்கொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதை நிறுத்திவிடுவது நல்லது.
இந்த மூன்று மாத காலங்களில் நீங்கள் கருத்தரிக்காமல் இருக்க ஆணுறை அல்லது விந்தணுக்களைக் கொல்லும் ஜெல்லிகளை உடைய பெண் உறை போன்றவைதான் சிறந்த கருத்தடை சாதனமாக இருக்கும்.. இந்த மூன்று மாத காலத்தில் உங்கள் கருப்பையில் கருத்தடை மாத்திரைகளால் ஏற்பட்ட மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு, கருப்பை சீரான நிலையை அடைய உதுவும்.
மேலும், இந்த மூன்று மாத இடைவெளியில் உங்கள் ஹார்மோன் சுரக்கும் முறைகள் இயல்பு நிலைக்குத் திரும்பவும் உதவுகிறது. அதே சமயம் உங்கள் மாதவிலக்கு சரியாக இருக்கிறதா, என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஊசியும் கருத்தரிப்பதற்கு முன்பே நிறுத்திவிட வேண்டும். நிறுத்தி 3 மாத காலத்திற்குள் கருத்தரிப்பதை நிச்சயமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.
அதே சமயம், காப்பர் டியைப் பயன்படுத்தி வந்தால் மாதவிலக்கின் முடிவில் அதை அகற்றி விடுங்கள். அதன்பிறகு நீங்கள் கருத்தரிப்பதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. இதே நிலைதான் ஆணுறை, அணுக்களைக் கொல்லும் ஜெல்லிகளைப் பயன்படுத்துவது போன்ற கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தினால், அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தியதும் கருத்தரிப்பது நிகழலாம். இவற்றால் கருத்தரிப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
எதுவாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையுடன் செயல்பட வேண்டும். சில கருத்தடை சாதனங்களை 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தவேக் கூடாது. அப்படிப்பட்ட சாதனங்களை 2 ஆண்டு கழித்து உடனடியாக மருத்துவரிடம் சென்று நீக்கிக் கொள்வது நல்லது. நீங்களாக தள்ளிப் போடுவது உடலை பாதிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» கண்களின் அழகிற்கான குறிப்புகள்
» காது வலி தீருவதற்கான வழி
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» கண்களின் அழகிற்கான குறிப்புகள்
» காது வலி தீருவதற்கான வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum