அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது
Page 1 of 1
அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது
அமர்நாத் யாத்திரை நேற்று துவக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே மோசமான வானிலை மற்றும் பனிப் பொழிவின் காரணமாக தற்காலிகமாக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தென் பகுதியில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு புனித யாத்திரை நேற்று துவங்கியது. முதல் கட்டமாக 900 பக்தர்கள் நேற்று அமர்நாத் பயணத்தை துவக்கினர்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்திரிகள் முகாமில் இருந்து இந்த புனித யாத்திரை துவங்கியது. முதல் கட்ட பயணக் குழுவில் 607 ஆண்கள், 229 பெண்கள் மற்றும் 64 குழந்தைகள் இடம் பெற்றுள்ளனர். இந்த யாத்திரையை காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் நவாங் ரிக்ஜிம் ஜோரா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
யாத்திரை குழுவினருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் யாத்திரை செல்லும் பாதையை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமர்நாத் யாத்திரையைத் துவக்கிய பயணிகள் அங்குள்ள முகாம்களில் பத்திரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதை சரி செய்யப்பட்டதும், பயணிகள் தங்களது பயணத்தைத் துவக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கான புனித யாத்திரை 2 மாதங்கள் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருத்தடைகளை நிறுத்துவதற்கான காலம்
» அமர்நாத் குகையில் அதிசய லிங்கம்
» காஞ்சிபுரத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்!
» மலாயாவின் மாட்சியும் - காஷ்மீர் அமர்நாத் காட்சியும்
» காசி யாத்திரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum