காதுகேளாமை குறைபாடு - சிகிச்சை முறைகள்!
Page 1 of 1
காதுகேளாமை குறைபாடு - சிகிச்சை முறைகள்!
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
..............................................................................-குறள்
நம் உடலின் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் காதுகள் மிகவும் முக்கியமானவை. அதனால் தான் கற்றலில் கேட்டலே நன்று என்று கூறுகிறார்கள். மனிதர்கள் பொதுவாக 20 வயதை நெருங்கும்போது, காதுகளின் கேட்புத் திறன் மெல்லக் குறையத் தொடங்கும். அதற்காக முழுவதுமாக காதுகள் செயல் இழந்து விடும் என்பதல்ல. அதிக ஓசையில் உணரப்படும் ஒலிகளே முதலில் குறைய ஆரம்பிக்கும். வயது முதிர்வால் ஏற்படும் இந்த கேட்புத்திறன் இழப்பு சாதாரணமானவையே.
காது கேளாமை குறைபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காயம், நோய்வாய்ப்படுதல், பரம்பரை குறைபாடு போன்றவை இதில் அடங்கும். காதுகேளாமையை பிறவிச் செவிடு என்றும், பிறந்து சில காலத்திற்குப் பின்னர் ஏற்படும் செவிடை இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் செவிடு என்றும் வகைப்படுத்தலாம். பிறவியிலேயே செவிடாக இல்லாமல் பிற்காலத்தில் செவிடாவதற்கு பேரிரைச்சல் கூட ஒரு காரணமாக அமைய நேரிடுகிறது.
காதுகேளாமை பற்றி அறியும் முன் காதுகளின் பாகங்களைப் பற்றி பார்ப்போம்.
வெளிப்புற காது (Outer ear)
இது நாம் ஒவ்வொருவரிடத்திலும் பார்க்கக்கூடிய காது மடல்களை எடுத்துக் கொள்ளலாம். ஒலிகளை இவை வாங்கி உட்புறத்திற்கு குழாய் ஒன்றின் மூலமாக செவிப்பறைக்குக் கொண்டு செல்கிறது.
நடுப்புற காது (Middle ear)
நடுப்புற காதில் 3 பிரிவுகள் காணப்படுகின்றன. செவிப்பறையின் வெளிப்பகுதி. இப்பகுதியில் 3 சிறு எலும்புகள் உள்ளன. சுத்தி எலும்பு அல்லது மல்லியஸ், இன்கஸ் மற்றும் ஸ்டேப்ஸ் எனப்படுபவை. ஒலி அலைகள் ஏற்பட்டவுடன் செவிப்பறைகளின் அசைவிற்கேற்ப இந்த எலும்புகள் ஒலியை பெருக்கும் பணியை மேற்கொள்கின்றன. நடுப்புற காதுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு குழாய் தொண்டையின் பின் பகுதியில் சேர்ந்து, ஒலி அலைகளால் உருவாகும் அல்லது வெளிப்படும் காற்றுக்கு ஏற்ப சமநிலையை ஏற்படுத்துகிறது.
உட்புறக் காது (Inner ear)
காக்ளியர் எனப்படும் சிறிய சுருள் குழாய் ஒன்றின் மூலமாக ஒலி அலைகள் உட்புறக் காதுகளில் பெறப்படுகின்றன. முடிகள் போன்ற நுண்ணிழைகள் காக்ளியரில் இருப்பதால் அவை தங்களுக்கு ஏற்படும் ஒலி அதிர்வை - தகவலை மின்காந்த துடிப்புகளுடன் குறுக்கிட்டு காக்ளியர் நரம்பு மூலமாக மூளைக்கு அனுப்பும் பணியை செய்கின்றன. காதுகளில் இருக்கும் பகுதிகளிலேயே மிகமிக சென்சிட்வான அதே நேரத்தில் முக்கியமான பகுதி என்று காக்ளியரை கூறலாம்.
இவை தான் காதுகளில் காணப்படும் பகுதிகளாகும். தொடர்ந்து காது கேளாமல் செவிடாவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
பிறவிச் செவிடு
நடுப்புறக் காதில் இடம்பெறும் 3 சிறு எலும்புகள் இல்லாமலேயே குழந்தைகள் பிறக்குமானால், பிறவியிலேயே காதுகேளாமை ஏற்படலாம். இதன்காரணமாக உட்றக் காதுக்கு ஒலி அலைகள் அனுப்ப முடியாத சூழ்நிலை உருவாகும். மற்றொரு காரணம் ஒலி அதிர்வுகளுக்கு செவிப்பறையானது அதிராமல் போகலாம். உதாரணமாக செவியிலிருந்து சீழ் வடிவதால் செவிப்பறை செயல்பாடின்றி போவது ஒரு உதாரணம். பிறவியிலேயே செவிடாக இருப்பவர்கள் உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் இயற்கையான கேட்புத் திறனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் 50 முதல் 60 சதவீதம் வரை உள்ளன.
நரம்பு செவிடு
நோய், விபத்து அல்லது சில பாதிப்புகள் காரணமாக காக்ளியர் நரம்பு பாதிப்புக்குள்ளாகும் போது, செவிப்பறை அல்லது சிறு எலும்புகள் செயலாற்றும் வகையில் இருந்தாலும் மின் அதிர்வு அலைகள் மூளையை சென்றடைய முடியாத நிலையில் இதுபோன்ற நரம்பு செவிடு குறைபாடு ஏற்படும். வேறுசில பிரிவுகளில் மூளையிலேயே தகவல்களை பரிமாறிக் கொள்ள இயலாத குறைபாடு இருக்கலாம். இதுபோன்ற நரம்பு தொடர்பான குறைபாட்டிற்கு சிகிச்சை மூலம் பலன் ஏதும் இருக்காது என்பதே ஏறக்குறைய இதுவரை மருத்துவரீதியிலான உண்மை. இதுபோன்ற சிகிச்சை முறைக்கு தற்கால நவீன சிகிச்சை முறைகள் ஏதும் உள்ளனவா என்பது பற்றி உங்களின் மருத்துவரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தற்காலிக செவிடு - காரணங்கள்
சில நேரங்களில் காது கேளாமைக்கான காரணங்கள்:
காது ஜவ்வுப் பகுதியில் மெழுகு போன்ற படலம் ஏற்பட்டு ஒலிகளைத் தடுக்கும். சீழ் அல்லது மெழுகு போன்ற பொருள் காதுக் குழாயில் உருவாவதால் குறுகிய கால செவிடு ஏற்படலாம். இதேபோல பஞ்சு போன்ற வெளிப்புற பொருட்கள் அடைப்பால் காது கேளாமல் போகும் வாய்ப்புண்டு.
பொதுவாக சளி, ப்ளூ போன்ற நோய், காய்ச்சல் அல்லது ஒவ்வாமை நோய்கள் காரணமாகவும் தற்காலிகமாக காதுகேளாமல் போகக் கூடிய வாய்ப்பு உண்டு. இவை காதில் உள்ள குழாயை அடைப்பதால் இந்த நிலை உருவாகும்.
வெளிப்புறக் காதில் ஏற்படும் தொற்று அல்லது நடுப்புற காதில் ஏற்படும் தொற்று, சலம் அல்லது திரவம் வடிதல் ஆகியவற்றாலும் செவிப்பறையில் ஒலி கேட்பது பாதிக்கப்படலாம்.
அமினோகிளைகோசிடிஸ் போன்ற சில மாத்திரைகள் சாப்பிடுவது கூட தற்காலிகமாக காது கேளாத நிலையை ஏற்படுத்தி விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலி சிகிச்சை முறைகள்
» இந்திய பெண்களிடம் கருச்சிதைவு அதிகரிப்பு;தடுக்க சிகிச்சை முறைகள்
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஆண்மைக் குறைபாடு குறைய
» விந்து குறைபாடு குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum