ஆண்களுக்கும் வரும் மார்பகப் புற்று நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
Page 1 of 1

மார்பகப் புற்றுநோய் என்றாலே அது பெண்களுக்குத்தான் வரும் என்று ஆண்கள் நினைக்க வேண்டாம். அவர்களிடமும் மார்பகப் புற்று நோயை உருவாக்குவதற்கான ஜீன்கள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தோல், சுரப்பிகள், எழும்புகள் ஆகிவற்றில் உருவாகும் புற்றுநோய்கள் மட்டுமே ஆண்களை அதிகம் தாக்குவதால், அவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் ஜீன்கள் பெரும்பாலும் ஆண்களின் உடலில் இருந்துதான், அவர்களின் பெண் குழந்தைகளுக்குப் பரவுகிறது என்கிறார் அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள ஃபாக்ஸ் புற்றுநோய் ஆய்வு மையத்தின் மருத்துவர் மேரி டெலி.
பெரும்பாலான ஆண்கள் தங்களிடம் மார்பகப் புற்றுக்கான ஜீன்கள் உள்ளனவா என்பதை சோதனை மூலம் தெரிந்துகொள்ள முன்வருவதில்லை என்று கூறும் அவர், பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரர்கள், கணவர், தந்தை ஆகியோரை சோதனை செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மார்பகப் புற்றுநோய் என்பது சாதாரண விடயமாகிவிட்டது. இந்த ஆண்டு 1,78.000 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 40,000 பேர் இறந்து விடுவார்கள் என்று கருதப்படுகிறது.
அதேநேரத்தில் 2,030 ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவு என்பதால் யாரும் கவலைப்படுவது இல்லை.
ஆண்களின் உடலில் உள்ள BRCA-1 அல்லது BRCA-2 ஆகிய ஜீன்கள் மார்பகப் புற்று நோய்க்குக் காரணமாக உள்ளன. இந்த ஜீன்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தையிடமிருந்து கடத்தப்படுகிறது.
இதைப்பற்றி மருத்துவர் டெலி கூறுகையில், "ஏற்கெனவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ள குடும்பங்களில், சிறு குழந்தைகளின் தந்தைகள் கண்டிப்பாக ஜீன் சோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 22 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் அபாயம்
» கண்களுக்கு பயிற்சி
» கண்களுக்கு பயிற்சி
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய்
» கண்களுக்கு பயிற்சி
» கண்களுக்கு பயிற்சி
» கண்களுக்கு பார்வை கொடுக்க
» வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum