வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய்
Page 1 of 1
வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய்
வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நாரத்தங்காயை வட்ட வட்டமாய் நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் இட்டு வாயை துணியால் மூடி விடவும். இதனை அவ்வப்போது வெயிலில் உலர்த்தி வரவும். இப்படி 40 நாட்கள் செய்து பிறகு அதில் இருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் குணமாகும். நாரத்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும். நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும். நாரத்தை பழத்தை சாறு பிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் தணிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்ப கால மசக்கைக்கு ஏற்ற நாரத்தங்காய்
» வயிற்றுப் போக்குக் கட்டுப்பட
» வயிறு கோளாறுக்கு சோற்றுக் கற்றாழை
» வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எளிய மருந்து
» வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு
» வயிற்றுப் போக்குக் கட்டுப்பட
» வயிறு கோளாறுக்கு சோற்றுக் கற்றாழை
» வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எளிய மருந்து
» வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum