டெரர் டெங்கு... சில ஆலோசனை
Page 1 of 1
டெரர் டெங்கு... சில ஆலோசனை
டெங்கு என்பது ஒருவித வைரஸ் காய்ச்சல். இதற்கு தனியாக மருந்தோ, மாத்திரைகளோ இல்லை. தடுப்பூசிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. நம் ரத்தத்தில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘பிளேட்லெட்’ எனப்படும் நுண்ணிய எதிர்ப்பான்கள் உள்ளன. அவற்றை இந்த வைரஸ் கொன்றொழித்து விடும். இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையக் குறைய... மூக்கு, ஈறுகள் மற்றும் தோலிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கும்.
மூட்டுகளில் ரத்தம் கட்டிக்கொள்ளும். காபி நிறத்தில் வாந்தி, கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறும். 103 முதல் 105 டிகிரி காய்ச்சல் இருக்கும். தொடக்க அறிகுறிகள் தெரிந்தவுடனே மருத்துவரிடம் செல்வது அவசியம். இல்லாவிட்டால் நுரையீரல், இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம். தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு சிகிச்சை அளித்து விட்டால் 6 முதல் 10 நாட்களுக்குள் குணமாகிவிடும்...’’ என்கிறார் டாக்டர் மோகனசுந்தரம்
ரத்தக்கசிவு ஏற்பட்டால், தேவைக்கு ஏற்ப ‘பிளேட்லெட்’ எதிர்ப்பான்களை செலுத்துவார்கள். ரத்தத்தில் இருந்து பிளேட்லெட்டை பிரித்தெடுக்கும் நவீன கருவி சென்னை உள்ளிட்ட ஓரிரு அரசு மருத்துவ மனைகளில் இருக்கிறது. தானம் பெறும் ரத்தத்திலிருந்து இந்த எதிர்ப்பான் பிரித்தெடுக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. அதனால் அவர்கள் எளிதில் இதற்கு இலக்காகி விடுகிறார்கள். டெங்கு காய்ச்சல் வந்து 2 நாட்களில் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு அறிகுறிகளை சொல்லத் தெரியாததால் காலங்கடந்தே நோயின் தன்மை புரிகிறது. குழந்தைகளை கொசுவலை போர்த்தி தூங்கச் செய்ய வேண்டும். காய்ச்சல் வந்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்’’ என்கிறார் மோகனசுந்தரம்.
டெங்கு காய்ச்சல் தொடுவதாலோ, இருமுவதாலோ பரவுவதில்லை. ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசுவே இந்நோயின் கிருமிகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரப்புகிறது. பிற கொசுக்களைப் போலன்றி, இவை உடலெங்கும் வெள்ளை நிறக் கோடுகளோடு இருக்கும். கூர்ந்து பார்த்தால் அடையாளம் தெரிந்துவிடும். பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். கோடைக்காலத்தில் பெய்யும் மழையே இந்தக் கொசுக்களின் உற்பத்திக்களம். திறந்தவெளியில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரின் மேற்பரப்பில் முட்டையிடும். அதிவேகத்தில் இவை பெருகுவதால், கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
டெங்கு அறிகுறிகள்
கடும் காய்ச்சல்,கண்களின் பின்புறம் வலி. மூட்டு வலி. முதுகு வலி வாந்தி சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் கொப்புளங்கள் மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு தொடர் அறிப்பு
வந்தால் என்ன செய்ய வேண்டும்
பதட்டபடாமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். பிறருக்க பரவாமல் தடுக்க் கொசுவலை அல்லது கொசுவிரட்டி பயன்படுத்துங்கள். சத்துள்ள நீர்ஆகாரங்களை சாப்பிடுங்கள். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை சாப்பிடாதீர்கள்
தடுப்பது எப்படி
சூலழை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கொட்டாங்குச்சி. மண்பானை, தென்னை மட்டை போல தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள அனைத்துப் பொருட்களையும் அழித்துவிடுங்கள்.. தண்ணீர் தொட்டிகள் பாத்திரங்களை மூடி வைத்து பராமரியுங்கள். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள். வீடுகளில் கொசுவிரட்டி அல்லது கொசுவலை பயன்படுத்துங்கள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெங்கு சில ஆலோசனை
» டெங்கு காய்ச்சல் குறைய
» ஆக்டோபஸ் டெங்கு...
» டெங்கு காய்ச்சல் - ஒரு பார்வை
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» ஆக்டோபஸ் டெங்கு...
» டெங்கு காய்ச்சல் - ஒரு பார்வை
» டெங்கு காய்ச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum