ஆக்டோபஸ் டெங்கு...
Page 1 of 1
ஆக்டோபஸ் டெங்கு...
டெங்குவா? எலிசா டெஸ்ட்
டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எலிசா என்ற ரத்த பரிசோதனையை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் தான் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? இல்லையா என முழுமையாக தெரியவரும். இதை தவிர, மற்ற ரத்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்ய கூடாது. இதனால், தவறான பரிசோதனை முடிவுகள் வரக்கூடும்.
டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம். இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடைய கூடும். அதனால், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சல் 4 கட்டங்களை கொண்டது
டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு சாதாரண காய்ச்சல், டெங்கு ரத்த போக்கு காய்ச்சல், டெங்கு அதிர்ச்சி நோய் என 3 கட்டங்களை கொண்டது.
டெங்குவின் முதல் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, கண் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். டெங்குவின் 2ம் கட்டத்தில் கண், மூக்கு, நக கண், பல் ஈரலில் இருந்து ரத்தம் வெளியேறும். அதன்பின், உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். உடலில் அம்மை போன்று சிறு புள்ளிகள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்.
மலம் கருப்பாகவும், சிறுநீர் சிவப்பு நிறத்திலும் போகும். டெங்குவின் கடைசி கட்டத்தில் உடலின் உள்ளேயும், வெளியேயும் ரத்த போக்கு இருக்கும். நினைவுகள் தடுமாறும். சுயநினைவு இழக்கும். அதன்பின், கோமா நிலைக்கு தள்ளப்பட்டும், உயிரிழப்பு ஏற்படும். அதனால், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சலை எப்படி தடுக்கலாம்
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகக்கூடியது. மேலும், இந்த கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். இவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மூடி இல்லாத பொருட்களில் தண்ணீரை தேக்கி வைக்க கூடாது. வாட்டர் டேங்க்குகளை மூடியே வைக்க வேண்டும். வீட்டில் சிறு பாத்திரங்களில் தண்ணீர் அதிக நாட்களுக்கு வைக்க வேண்டாம்.
மேலும் தேங்காய் ஓடு, டயர், பூந்தொட்டி, பிரிட்ஜ், ஆட்டுக்கல், வாலி மற்றும் உடைந்த பாத்திரங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் உடனடியாக அகற்றிவிட வேண்டும். வீடுகளிலும் தேவையில்லாத உடைந்த பொருட்கள் ஏதாவது இருந்தால், அதனை அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு பரப்பும் கொசு கடிக்காமல் இருக்க கை, கால்கள் வெளியில் தெரியாமல், உடல் முழுவதும் மறைக்கும் வகையில் உடை அணிவது நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெங்கு சில ஆலோசனை
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் - ஒரு பார்வை
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் - ஒரு பார்வை
» டெங்கு காய்ச்சல் குறைய
» டெங்கு காய்ச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum