கேரள மாநில கிணற்று நீரில் கோலிஃபோம் பாக்டீரியா: அமைச்சர் பிரேமசந்திரன்
Page 1 of 1
கேரள மாநில கிணற்று நீரில் கோலிஃபோம் பாக்டீரியா: அமைச்சர் பிரேமசந்திரன்
FILE
கேரள மாநிலத்திலுள்ள 80 விழுக்காடு கிணறுகளில் உள்ள நீரில் கோலிஃபோம் பாக்டீரியா கலந்துள்ளதென ஆய்வில் தெரிவந்துள்ளதாக அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 998 கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீர்களைப் பரிசோதனை செய்ததில் அவற்றில் கோலிஃபோம் பாக்டீரியா கலந்துள்ளது தெரியவந்துள்ளது என்று பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் மனித, விலங்குக் கழிவுகள் கலக்கும்போதுதான் அதில் கோலிஃபோம் பாக்டீரியா கலப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது உடலிற்குத் தீங்கானது.
குடிநீரில் கோலி்ஃபோம் பாக்டீரியா கலந்திருந்தால் அதனை அருந்தக்கூடியது அல்ல என்று உலகப் பொது நல அமைப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிபட்ட ஆய்வு தமிழ்நாட்டில் செய்யப்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதுமில்லை. கோலிஃபோம் பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன, அவற்றில் சில மரணத்தை ஏற்படுத்த வல்லவை என்று உயிரியல் ஆய்வுகள் கூறுகின்றன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாக்டீரியா பாக்டீரியா
» பாலில் உருவாகும் பாக்டீரியா
» ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்
» ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்
» நீரில் மிதக்கும் நிலா
» பாலில் உருவாகும் பாக்டீரியா
» ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்
» ஜல்ப்’ பிரச்னையா? பாக்டீரியா பார்த்துக்கும்
» நீரில் மிதக்கும் நிலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum