கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... பார்வை குறைபாடு; விழிப்புணர்வு அவசியம்
Page 1 of 1

எண்ணற்ற அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த இந்த உலகினை கண்டு மகிழ உதவுவது கண்கள் தான். நமது தோற்றம் வளர வளர நமது கண்களும் வளர்ச்சி அடைகிறது. கண்களில் ஏற்படும் பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் அதை உடனுக்குடன் மருத்துவரை அணுகி சரிசெய்து பரிசோதித்துக்கொள்வது அவசியம்.
இது குறித்து கோவை ஐ பவுண்டேசன் மருத்துவமனை மருந்துவ இயக்குநர் சித்ரா ராமமூர்த்தி கூறியதாவது:
அதிகமாக வேலை செய்வதன் மூலம் உடலுக்கு சோர்வு ஏற்படுவதை போன்று கண்களும் சோர்வு அடைகிறது. மாறிவரும் நாகரிக உலகில் மனிதர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கை மேற்கொண்டு வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் வேலை, பொழுதுபோக்கு, கல்வி போன்ற பல்வேறு காரணம் கருதி கணினியை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். கணினி பயன்படுத்துவது மட்டும் இன்றி தொடர்ந்து கண்கள் ஒரே வேலையை (பார்ப்பது) கூர்ந்து செய்யும் பொழுது அதற்கு வறட்சி ஏற்பட்டு சோர்வு ஏற்படுகிறது. சோர்வு அதிகமாதை கண்டு கொள்ளாமல் விடும் பட்சத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
உடல் பயிற்சிகள் போன்று கண் சோர்வடையாமல் இருப்பதற்கான பயிற்சிகள் இருக்கிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான வேலைகளை செய்வதை தவிர்த்து சிறிது இடைவேளை விட்டு பணிகளை தொடர்வது நல்லது. குழந்தைகள் அதிகம் பல்வேறு விதங்களில் பார்வை குறைபாடுகளினால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்த போதிய விழிப்புணர்வு பெற்றோர்களிடம் இருப்பதில்லை.
சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பார்வை குறைபாடுகளுக்கான பரிசோதனை முகாம் பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது. இதில், 15 சதவீத மாணவர்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் அதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்கவேண்டும். இன்றும் கிராமப்புற பகுதிகளில் மாறுகண் என்பது அதிஷ்டம், வரம் என்ற மூட நம்பிக்கையில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
ஒரு பொருளை இரண்டு கண்களாலும் பார்க்கும் பொழுது தான் அது நம் மூளைக்கு கொண்டு செல்லப்படும். மாறுகண் என்பது கண் பாதிப்பினால் ஏற்படும் பார்வை குறைபாடு. கண்களில் கட்டி இருத்தல் போன்ற வேறு காரணங்களாலும் மாறுகண் இருக்கலாம். இதை உடனடியாக பரிசோதித்து கொண்டால் பாதிப்புகளை தவிர்த்துவிடலாம். கண்களின் கருவிழி உடலுக்கு ஏற்ப 18 வயது வரை வளர்ச்சி அடைகிறது. அதற்கு மேல் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்த வளர்ச்சி காலத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு முறை அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். சில பாதிப்புகள் ஆரம்பநிலையில் தெரிவது கிடையாது. பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து சரிசெய்து கொள்ளலாம்.
இந்தியாவை பொறுத்த வகையில் சர்க்கரை வியாதி காரணமாக கண்களில் பாதிப்புகள் ஏற்படுபவர்கள் அதிகம் உள்ளனர். இது டயாப்டிக் ரெக்டினோபதி என்று கூறப்படுகிறது. இதனால் கண்களின் ரத்தகுழாய்களில் ரத்த கசிவு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரையினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் பாதிப்புகளின் வருடத்தை பொறுத்து டயாப்டிக் ரெக்டினோபதி பாதிப்பும் அதிகமாகும். இதற்கு பரிசோதனைகள் செய்வது மட்டும் இன்றி சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்.
கண்களில் எதிர்பாராத விதமாக பாதிப்புகள் ஏற்பட்டால் நம் கைகளால் தேய்தல், துடைத்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் மருத்துவரை அணுகவேண்டும். கண்களில் ஆசிட் போன்றவை ஏதேனும் பட்டுவிட்டால் உடனடியாக தண்ணீரை கண்களில் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடம் வரை அடிக்கவேண்டும். அவ்வாறு செய்வதால் அதன் பாதிப்பு தன்மை குறையும். இதுவே அதற்கான முதல் உதவி சிகிச்சை என்று கூறலாம். அதன்பின்பு மருத்துவரை அணுகி பரிசோதிக்கவேண்டும். மேலும், மக்களுக்கு கண்தானம் குறித்த விழிப்புணர்வு கட்டாயம் தேவை.
இறந்தவர்களின் கண்கள் 6 மணி நேரத்திற்குள் எடுத்து கார்னியல் பாதிக்கப்பட்ட இருவருக்கு பார்வை அளிக்க முடியும். மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் பொழுது நம் நாட்டில் இதன் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களின் நீர் அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் பார்வை சிறிது சிறிதாக குறைந்து முற்றிலும் பார்வை இழக்கும் சூழல் ஏற்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூட்டு வலியா... இடுப்பு வலியா... விழிப்புணர்வு அவசியம்
» பெண்கள் விழிப்புணர்வு
» மூட்டு வலியா… கால்மரமரப்பா… விழிப்புணர்வு அவசியம்
» மூட்டு வலியா... கால்மரமரப்பா... விழிப்புணர்வு அவசியம்
» உணவுப் பொருட்களின் கலப்படம் பற்றி விழிப்புணர்வு அவசியம்:-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum