மூட்டு வலியா... கால்மரமரப்பா... விழிப்புணர்வு அவசியம்
Page 1 of 1

டிஸ்க் விலகல்:
கழுத்துப்பகுதியில், இடுப்பில், முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி, திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும்.
ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் :
இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறையும், பசியின்மை, மலக்கட்டு ஏற்படும். பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என பலவீனமாக காணப்படுவார்கள்.
தோள்பட்டை வலி :
ஆண்கள் சட்டை போடும் போது கையை தூக்க முடியாமல் தவிப்பர். பெண்கள் பிளவுஸ் போடமுடியாமல் அவதிப்படுவர். குளித்தபின் தலை துவட்ட, தலைவாரிக்கொள்ள முடியாது. இந்த நிலை இருந்தால் அவர்கள் உடனே தங்கள் உடலில் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம். சர்க்கரை நோய் என்பது உடனடியாக தெரியக்கூடிய நோய் அல்ல. சிலர் மேற்கூறிய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அது சர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறியாகும். 70 சதவீதம் பேர் தோள்பட்டையிலுள்ள சவ்வு பாதிப்பினால் தோள்பட்டையில் வலி, பிடிப்பு என அவதிபடுவர். இது பெரி ஆர்த்ரைடிஸ் அல்லது ப்ரோஜன் சோல்டர் என்று அழைக்கப்படுகிறது.
முழங்கால் மூட்டுவலி :
அதிக உடல் எடை உடையவர்கள், மாடிப்படி அடிக்கடி ஏறி இறங்கும் பழக்கமுடையவர்கள், தரையில் அமர்ந்து எழும் பழக்கமுடையவர்கள், இந்திய முறை கழிப்பிடங்கள் உபயோகிப்பவர்கள், கால்சியம் வைட்டமின் பற்றாக்குறையுள்ளவர்கள், முழங்கால் மூட்டு தேய்மானம் எனும் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளது. மூட்டில் உள்ள கார்டிலேஜ் என்ற ஜவ்வு பலவீனமாகி பின் நாட்கள் செல்ல செல்ல மூட்டு தேய்மானம் அடைய துவங்குகிறது. தொடக்கத்தில் மூட்டின் முன்புறத்தில் குத்தல் போல் வலி ஏற்படும். பின்னர் வலி சிறிது தூரம் நடக்க துவங்கியவுடன் சரியாகி விடும். இது போலவே அதிக நேரம் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டு பின் எழுந்தவுடன் சிறிது வலி ஏற்பட்டு பின் நடக்க, நடக்க வலி மறைந்து விடும். வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த நோய்களுக்கு, அறுவை சிகிச்சையில்லாமல் கேரள பாரம்பரிய முறையில் ஆயுர்வேத சிகிச்சை அளித்து குணமாக்கலாம். இந்த வியாதிக்கு பிரபா ஆயுர்வேத மருத்துவமனையில் கேரளா ஆயுர்வேத சிகிச்சையான அப்யங்கம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. இலைக்கிழி, மஞ்சள் கிழி, நாரங்காகிழி (எலுமிச்சை பழத்தை துணியில் போட்டு கட்டி எண்ணெய்யில் ஊற வைத்து தேய்ப்பது) சிகிச்சை அளிக்கலாம். மூட்டு வலிக்கு மூட்டை சுற்றி மூலிகை எண்ணெய் ஊற வைக்கக் கூடிய கடிவஸ்தி எனும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பஞ்சகர்ம, பிஜூ, போன்ற ஆயுர்வேத சிகிச்சை மூலமும் நோயை குணப்படுத்தலாம். உத்வர்த்தனம் சிகிச்சை முறையில் உடல் பருமனை குறைக்க முடியும். இந்த சிகிச்சையால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வயிற்றை சுற்றி உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
கை, கால் எரிச்சல் இருக்காது. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க சிரோதாரா, சிரோவஸ்தி, பிழித்தல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஒரு மணி நேரம் சிகிச்சை என 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூட்டு வலியா… கால்மரமரப்பா… விழிப்புணர்வு அவசியம்
» மூட்டு வலியா... இடுப்பு வலியா... விழிப்புணர்வு அவசியம்
» மூட்டு வலியா?
» உணவுப் பொருட்களின் கலப்படம் பற்றி விழிப்புணர்வு அவசியம்:-
» வயிறு வலியா... கவனமாக இருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum