தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு 57 சதவீதம் குறைவு

Go down

 கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு 57 சதவீதம் குறைவு   Empty கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு 57 சதவீதம் குறைவு

Post  ishwarya Wed Feb 27, 2013 12:49 pm

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு 57 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக எய்ட்ஸ் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு எய்ட்ஸ் பாதிப்பு புள்ளி விவரங்கள் அறிக்கை வெளியிடப்பட்டது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 642. எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் கடந்த ஆண்டு 1.48 லட்சம் பேர் இறந்தனர். இவர்களில் 7 சதவீதம் பேர் குழந்தைகள்.

எய்ட்ஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் 0.41 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு கடந்த 2006ம் ஆண்டில் 0.35 சதவீதமாகவும், கடந்த ஆண்டில் 0.27 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் இலவச ஏ.ஆர்.டி(ஆன்ட்டி ரெட்ரோவைரல் தெரபி) சிகிச்சை மூலம் 1.5 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் இந்தியாவில் 2.74 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாயினர். ஆனால் கடந்த 2011ம் ஆண்டில் 1.16 லட்சம் பேர் மட்டுமே எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாயினர். கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு 57 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருந்த மாநிலங்களில் இதே காலத்தில் எய்ட்ஸ் பாதிப்பு 76 சதவீதமாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், எய்ட்ஸ் பாதிப்பு குறைவாக இருந்த மாநிலங்களில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், எய்ட்ஸ் பாதிப்பு, பலி எண்ணிக்கை ஆகியவை தொடர்ந்து குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடந்த 11 ஆண்டுகளில் 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி மறுப்பு
» கடந்த ஆறு ஆண்டுகளில் 25,000 இலங்கையர்களுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை-இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய
» தமிழகத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் 92,363 பேருக்கு எச்ஐவி, எய்ட்ஸ் முதலிடத்தில் ஆந்திர மாநிலம்
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» நடுவருடன் வாக்குவாதம்: மஹேலவுக்கு 10 சதவீதம் அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum