யாருக்கு ‘கேட்’காது?
Page 1 of 1
யாருக்கு ‘கேட்’காது?
நாகர்கோவில் உமர் மருத்துவ மனை டாக்டர் பி.முகமது உமர் கூறியதாவது: கே: செவிகளின் செவித்திறன்தான் மூளை வளர்ச்சிக்கு அடிப்படையா?
டாக்டர்: சராசரி மனிதனின் மூளை எடை கிட்டத்தட்ட 1400 கிராம். ஒரு வயதில் 900 கிராம், 2வது வயதில் 300 கிராம் ஐந்து வயதுக்குள் 200 கிராம் என படிப்படியாக வளர்ச்சி பெறுகிறது.
ஐந்து வயதுக்கு பின் மூளையின் வளர்ச்சி மிகமிக குறைவே. எனவே இந்த ஐந்து வயதிற்கு உட்பட்ட காலத்தில் குழந்தையின் மூளைக்கு நாம் செலுத்துகின்ற எந்தவிதமான அறிவும் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். குழந்தைகளின் கேள்வித்திறனை தகுந்த அளவிற்கு பேணிகாத்தால் பின்னாளில் அந்த குழந்தைகள் தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும், தொழில்நுட்ப வல்லு னர்களாகவும் திகழ முடியும்.
கே: செவித்திறன் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வழிமுறைகள் என்ன?
டாக்டர்: குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் காதுகளுக்கு திடீரென்று பலத்த ஒலிகள் கேட்கும்போது அதன் உடலில் ஒருவித அனிச்சை தூண்டுதல் ஏற்பட்டு குழந்தை தனது கை, கால்களை மடக்கி நடுங்குவது போன்ற உணர்வு ஏற்படும். பெற்றோர்கள் இத்தகைய செயல் குழந்தைக்கு ஏற்படுகிறதா என்று கவனிக்கவேண்டும்.
மேலும் குழந்தை பிறந்த முதல் 18 மாதங்களுக்குள் ஒரு சில வார்த்தைகள் உச்சரிக்க தொடங்க வேண்டும். அவ் வாறு உச்சரிக்க தவறினால் உடனே தகுந்த அனுபவம் வாய்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுக வேண்டும். கே: இந்த காலகட்டத்தில் காது செவிட்டு தன்மைக்கு என்ன காரணம்?
டாக்டர்: வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள், ரோடுகளில் எங்கு பார்த்தாலும் வாகனங்களின் ஒலிபெருக்கி சப்தங்கள், வாகன புகை மூட்டங்கள், அதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரும் கையில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து செல்வது போன்றவற்றின் விளைவாக ஒருவருக்கு அறுபது வயதில் ஏற்பட வேண்டிய கேள்வித்திறன் குறைபாடு நாற்பது, முப்பது வயதிற்குள்ளாகவே ஏற்பட தொடங்கி விடுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காது கேளாதவர்களுக்கு 3 மணி நேரத்தில் காது கேட்கும் : சித்த மருத்துவ காதொலி சிகிச்சை
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?

» காது வலி குறைய
» காது இரைச்சல் அகல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum