தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கட வலையில் விழவா சமூக வலை?

Go down

சங்கட வலையில் விழவா சமூக வலை?            Empty சங்கட வலையில் விழவா சமூக வலை?

Post  ishwarya Wed Feb 27, 2013 12:22 pm

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன் படுத்தும் பெண்களில் 58 சதவிகிதம் பேர் மிக ஆக்டிவ் ஆக இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். “புதுப்புது நண்பர்கள், சாட்டிங், வீடியோ காலிங் என தங்கள் நட்பு வட்டாரத்தை பெரிதுபடுத்திக் கொள்ள இன்றைய தலைமுறையிடம் ஆர்வம் அதிகம். போலி பெயரில் ஐடி தொடங்கி பந்தா ஸ்டேட்டஸ்களால் பெண்களைக் குறி வைக்கும் மோசடிக் கும்பலும் இணைய தளத்தில் அதிகளவில் இருக்கிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பெண்கள் தங்களைப் பற்றிய முழுவிவரங்களையும் புகைப்படங்களையும் பதிவுசெய்வதுதான் ஆபத்து” என எச்சரிக்கிறார்கள் சைபர் க்ரைம் போலீசார்.

‘‘சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்திருக்கிறார்கள். ‘ஹாய்... ஹலோ’வில் ஆரம்பித்த அவர்களின் நட்பு சாட்டிங்கில் எல்லை மீறி, ‘ஒரு முறை சந்திக்கலாம்’ என முடிவு செய்திருக்கிறார்கள். நேரில் சந்தித்த இருவருக்கும் டன் கணக்கில் அதிர்ச்சிதான் கிடைத்தது. காரணம், அவர்கள் இருவரும் சொந்த அக்கா, தம்பி! ஃபேஸ்புக்கில் போலி முகவரியில் நட்பு பாராட்டி வரைமுறை இல்லாமல் ஆபாசமாகப் பேசியது அக்காவும் தம்பியும் என்றால் என்ன சொல்வது? இது மட்டுமல்ல... சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆபாச படங்களை இணைப்பது, வீடியோக்களை பகிர்ந்து கொள்வது என ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் குற்றவாளிகளுக்கு தேவையான சகல வசதிகளையும் பெண்களே பொதுதளத்தில் உருவாக்கித் தருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி.

எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

உங்களைப் பற்றிய தகவல்களை முதலில் பொதுவெளியில் வெளிப்படுத்தாதீர்கள். மொபைல் நம்பர், மெயில் ஐடி, உங்கள் தோழிகளின் படங்கள்,
உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம்.

பிரௌசிங் சென்டர் செல்லும் பெண்கள் தங்கள் அக்கவுன்ட்டை சரியாக லாக் அவுட் செய்துள்ளோமா என செக் செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் அக்கவுன்ட்டை ஹேக் செய்யும் அபாயம் இருக்கிறது. அதேபோல உங்கள் பாஸ்வேர்டு விஷயத்திலும் கவனம் தேவை. அடிக்கடி மாற்றம் செய்வது நல்லது.

உங்கள் தோழிகளின் புகைப்படங்களை அவர்களே அனுமதித்தாலும் உங்கள் வலைப்பக்கத்தில் அப்லோட் செய்யாதீர்கள். நண்பர்கள் பட்டியலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர்களை மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற நபர்களின் அறிமுகம், அவர்களுடனான நட்பு உங்களுக்கு எப்போதும் ஆபத்துதான். ‘நண்பனின் நண்பன் எனக்கும் நன்பனே’ என்ற வார்த்தைகள் எல்லாம் சமூக தளங்களில் செல்லாது. என்னுடைய நண்பர் நல்லவர் என்ற எண்ணம் உங்களுக்கு வந்தால் மட்டும் அவர்களை உங்கள் தளத்திற்குள் அனுமதியுங்கள்.

தேவையற்ற கமெண்ட், ஆபாசமான படங்கள், சாட்டிங் என வருபவர்களை உடனடியாக பிளாக் செய்து விடுங்கள். ஒரு நபர் மூலமாக உங்களுக்கு தொடர் தொல்லைகள் இருந்தால் உடனடியாக சைபர் க்ரைமில் புகார் செய்யுங்கள். ஆனால், அதற்கு முன் உங்கள் பக்கம் தவறுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது தான் இந்த குற்றங்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்’’ என்று எச்சரிக்கிறார்கள் சைபர் க்ரைம் போலீசார்.

ஐடி துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்குகிறார் கல்யாணி நாராயணன். இவர் ஐடி பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு அமைப்பைத் தொடங்கி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ‘‘ஐடி துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் பக்கத்து சீட்டில் இருப்பவர்களிடம் கூட சாட்டிங்கில்தான் பேசுவார்கள். எப்போதும் ஆன்லைனில் இருக்கும் இவர்களுக்கு சாட்டிங் என்பதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் போல. அதனால் அவர்களுக்கு வெளியில் இருக்கும் ஆபத்துகள் தெரிவதில்லை.

16 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக வலைத்தளங்களில் அதீத ஆர்வமாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கும் இவர்களது ஆர்வம் நாளடைவில் இவர்களை முடக்கி போட்டு விடும் நிலைக்கு போகிறது. தங்கள் அலுவலகங்கள், ட்ரிப் அனுபவங்கள் என எல்லாவற்றையும் ஷேர் செய்து ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். பல ஐடி கம்பெனிகளுக்கு நாங்கள் போனபோது இந்த விஷயத்தை நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.

அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் சட்டரீதியாக வழங்கி வருகிறோம். பிரச்னைகளில் சிக்கி அதை வெளியே சொல்ல முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் தகுந்த உதவிகளை செய்து வருகிறோம். பொதுவாக பெண்கள் தங்கள் பிரச்னைகளை கண்டு பயப்படாமல், தைரியமாக வெளிவர முன்வர வேண்டும். தங்களின் நெருங்கிய நண்பன் என்பதற்காக தங்கள் அக்கவுன்ட் பாஸ்வேர்ட், இன்னபிற தகவல்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

உங்கள் பர்சனல் உங்களுடையதாகவே இருப்பதுதான் நல்லது. உங்கள் நண்பன் நாளை உங்கள் எதிரியாக மாறினால் உங்களைப் பழி தீர்க்க காத்துக் கொண்டிருக்கும் தருணத்தை நீங்களே உருவாக்கிக் கொடுக்காதீர்கள். ஐடி நிறுவனங்களில் பணிபுவோரில் நைட் ஷிப்ட் பணிகள் பார்க்கும் பெண்களுக்கும் ஆன்லைன் ரிஸ்க் அதிகம். உங்கள் அக்கவுன்ட்டை பொதுவாக ஆஃப்லைனில் வைத்திருங்கள்.

இப்போது ஆன்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெர்ரி வைத்திருக்கும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். எனவே, அதன் மூலம் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு புது நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். விரைவில் அறிமுகமாக இருக்கும் டெக்னிக் மூலம் ஆபத்தில் இருக்கும் போது உடனடியாக தகவலை தெரிவிக்கலாம். பெண்கள் தங்கள் செல்போனில் தங்கள் குடும்ப உறுப்பினர், பாஸ், நண்பர்கள் என முக்கியமாக அவசரத்தில் உதவும் சில எண்களை ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏதாவது ஆபத்து நெருங்கும் போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒரு பட்டனை தங்கள் செல்போனில் இருந்து அழைத்தால் போதும். முக்கிய நபர்களுக்கு அந்த அலர்ட் சென்று விடும். அதில் நீங்கள் இருக்கும் ஏரியா, தகுந்த அடையாளத்துடன் அவர்களை அடையும். இதனால் ஆபத்துக்கு உதவ உங்கள் சொந்தங்கள் உடனே முயற்சி எடுப்பார்கள். இதை அடுத்த கட்டமாக மற்ற ஐடி கம்பெனிகளுக்கும் விரிவுபடுத்த இருக்கிறோம். இதேபோல சாம்சங் மொபைலிலும் சில சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. மொபைல் சர்வீஸ் நிறுவனங்களும் இதுபோன்ற பாதுகாப்பு சேவையை அளிக்கிறார்கள் (உதாரணத்துக்கு: ஏர்டெல் எமர்ஜென்சி கால் அலெர்ட்ஸ்)’’ என்கிறார் கல்யாணி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum