தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இரண்டாம் உலகம் - வலையில் மாட்டிய வேட்டைக்காரன்

Go down

இரண்டாம் உலகம் - வலையில் மாட்டிய வேட்டைக்காரன்  Empty இரண்டாம் உலகம் - வலையில் மாட்டிய வேட்டைக்காரன்

Post  ishwarya Thu Mar 07, 2013 2:38 pm

இரண்டாம் உலகம் இன்னும் முடியாத நிலையில் அடுத்தப் படம் ராணாவோடு என்று ஆச்ச‌ரிய மணி அடித்த செல்வராகவன், அடுத்த இரண்டு வருடத்தில் ஏழு படமாவது தயா‌ரிக்கணும் என்று இன்னொரு அஜென்டா முன் வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆர்வக்... ம்ஹும், நாம் அப்படி சொல்லக் கூடாது. இந்த ஆர்வத்துக்கு அணை கட்டுற மாதி‌ரி ஒரு வதந்தி.

அதாவது இரண்டாம் உலகத்தில் ஆர்யா பழங்குடி வேட்டைக்காரராக வருகிறாராம். வேட்டைன்னா விலங்குகள் இல்லாமலா? இதில் சில விலங்குகள் நல வா‌ரியத்தின் ஒப்புதலோடு நடிக்க வைக்கப்பட்டதாகவும், இன்னும் சில அவர்களுக்கு‌த் தெ‌ரியாமல் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனை அறிந்த விலங்குகள் நல வா‌ரியம் நடவடிக்கை எடுக்கயிருப்பதாகவும் தகவல். இது உண்மை என்றால் விலங்குகள் நல வா‌ரியம் ஓகே சான்றிதழ் தரும்வரை சென்சார் திரும்பிப் பார்க்காது.

துளசி மாதி‌ரி 14 வயது சிறுமியை காதல் காட்சியில் நடிக்க வைக்கலாம், சின்னஞ்சிறு குழந்தைகளை வெயில் படத்தில் வருவது போல் உச்சிப் பொழுதில் பொட்டு துணியில்லாமல் வறுக்கலாம் எந்த‌க் கேள்வியும் இல்லை. ஆனால் ச‌ரித்திரப் படத்தில் அரசன் குதிரை மேல் ஏறி வருவதை காட்ட வேண்டுமானால் முதலில் குதிரையின் சம்மதத்தை வாங்கி வா என்று வம்பிக்கிழுக்கும் இந்த விலங்குகள் நல வா‌ரியம்.

இந்த இம்சைக்கு எப்போது விடிவு காலம் கிடைக்குமோ.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum