இந்திய இறைச்சிகளில் அதிக கொழுப்பு
Page 1 of 1
இந்திய இறைச்சிகளில் அதிக கொழுப்பு
இந்திய இறைச்சிகளில் அதிக கொழுப்புச் சத்து நிறைந்துள்ளதாகவும், ஒரு கிண்ணம் கறியில் ஒரு நாள் முழுவதும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்புச் சத்து அடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
நெய்ல் ஃப்ளார் என்பவர் டெய்லி மெயில் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி கூறினார்.
நீங்கள் கறியை விரும்பி உண்ணும் பெண்ணாக இருந்தால் உங்கள் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். எனவே உடனடியாக இறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று பெண்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
உணவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு சிறிய சிக்கன் டிக்கா மசாலா, கொஞ்சம் சாப்பாடு மற்றும் நாண்(ரொட்டி) சாப்பிடும் பெண்ணிற்கு அந்த உணவின் மூலம் சராசரியாக 1,338 கலோரிகள் கிடைக்கின்றன. இந்த அளவிற்கு உடலில் இருந்து கொழுப்பைக் கரைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து 5 மணி நேரங்கள் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே உணவை தினமும் சாப்பிடும் பெண்ணிற்கு சராசரியாக 20 கிராமும், ஆணுக்கு 30 கிராம் எடையும் கூடுகிறது.
அதோடு நின்றுவிடவில்லை, இதே உணவை தொடர்ந்து உட்கொண்டால் தினமும் உடலுக்கு 3.6 கிராம் அளவிற்கு உப்பு சேர்கிறது. இதுவே குழந்தைகளாக இருந்தால் 6 கிராம் அளவிற்கு உப்பு சேர்கிறது.
எண்ணெயிலேயே வறுக்கப்பட்ட இறைச்சியை விட நாண்(ரொட்டி) வகைகளில் அதிக கலோரிகள் இருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 100 கிராம் நானில் 290 கலோரிகள் உள்ளன. இதற்கு 350 கிராம் சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் 685 கலோரிகள் எவ்வளவோ மேல் என்கிறது ஆய்வு அறிக்கை.
அயல்நாட்டு உணவுகளை விரும்பி உண்பவர்களின் விருப்பத்திற்கு உலை வைப்பது போன்று இன்னொரு ஆராய்ச்சி முடிவும் வெளி வந்துள்ளது.
அதில், சீன நாட்டு உணவு வகைகளான இனிப்பு சேர்த்து வேகவைத்த கோழி இறைச்சி, முட்டை ·பிரைட் சாதம், ஸ்பிரிங் ரோல்ஸ் போன்றவற்றில் 62.3 கிராம் சர்க்கரை இருக்கிறதாம். இப்படி சொன்னால் புரியாது என்பதற்காக அதாவது 19 தேக்கரண்டி என்று விளக்கமாகவும் சொல்லியிருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணாக இருந்தால் 90 கிராமும், ஆணாக இருந்தால் 120 கிராமும் சர்க்கரை பயன்படுத்தலாம். அதற்கு மேல் சேர்ந்தால் என்னவாகும் என்று சொல்லவும் வேண்டுமோ?
டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, யாராவது விருந்து கொடுத்தால் ஒரு பிடி பிடித்துவிடுவது, விரும்பிய உணவுப் பொருளை ஒரு கட்டு கட்டுவது போன்றவற்றை தவிர்த்து, ஒவ்வொரு நாளும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மீது கவனம் செலுத்துங்கள் என்கிறது ஆய்வின் முடிவு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய இறைச்சிகளில் அதிக கொழுப்பு
» இந்திய இறைச்சிகளில் அதிக கொழுப்பு
» கர்ப்பகாலத்தில் அதிக கொழுப்பு உணவு ஆகாது!
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» கொழுப்பு குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum