புகைப்பழக்கத்தை தூண்டும் மரபணு
Page 1 of 1
புகைப்பழக்கத்தை தூண்டும் மரபணு
களவும் கற்று மற' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நல்ல பழக்கங்களுக்கு இதனை பயன்படுத்துகிறோமோ இல்லையோ புகை பிடித்தல் போன்ற பழக்கத்திற்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறோம்.
அறிந்தும் அறியாத விடலைப் பருவ வயதில், `ஏன், நாமும் ஒரு சிகரெட் இழுத்துப் பார்ப்போமே?' என்று அனைவருக்கும் தோன்றுவது இயற்கைதான்.
நாகரீகம் பெருகி விட்ட தகவல் தொழில் நுட்ப உலகில் சில பெண்களும் இந்த எண்ணத்திற்கு விதிவிலக்கல்ல எனலாம்.
அதுசரி, சிகரெட்டைப் புகைத்தப் பின், சே... வேண்டாம் இந்தப் புகை என்று சிலரும், ஆஹா, என்ன மாதிரியான மயக்கம் என வேறு சிலரும் உணர்கிறார்கள்.
இவர்களில் 2ம் வகையினர் பரம்பரை மரபணு பாதிப்பால், சிகரெட்டை தொடர்வதற்கும், அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சிகாகோவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதோடு மட்டுமல்லாமல், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக மிச்சிகன் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒவிடே பொமரலியோ தெரிவித்துள்ளார். அவரது ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சிகரெட்டைக் கூட புகைத்துப் பார்ப்பது மிகவும் மோசமான யோசனையாகும் என்றும், அதுவே பொறியில் (புகைத்தல்) சிக்கக்கூடியதாக அமைந்து விடும் என்றும் ஒவிடே அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிறோம் என்பதை மரபணு தொடர்புடையவர்கள் உணர்வதே இல்லை என்று கூறிய அவர், இதனால் நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்கிறது என்றார்.
நிகோடின் பழக்கத்திற்கு அடிமை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு மரபணு காரணிகள் அதிகரித்து வருவதன் ஒருபகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புகைப்பழக்கத்தை தூண்டும் மரபணு
» புகைப்பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு
» புகைப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லையா சில ஆலோசனைகள்!!
» மரபணு சகாப்தம்
» மரபணு வாய் பூட்டு சட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum