மீன் வறுவல் - 5
Page 1 of 1
மீன் வறுவல் - 5
குரவை மீன் கால் கிலோ வாங்கி வந்து நன்றாய்த் தேய்த்துக் கழுவி குடல் முதலியவற்றை அகற்றி துண்டுகள் செய்து மறுபடியும் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.புளி எட்டு கிராம், உப்பு மூன்று கிராம், மஞ்சள் மூன்று கிராம், சீரகம் இரண்டு கிராம், வெங்காயம் பத்து கிராம், இவற்றை சொர சொரப்பாக அரைத்து மீன் துண்டுகளில் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து பிறகு தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிளகாய் நான்கு கிராம் மிளகு இரண்டு கிராம், மல்லி நான்கு கிராம், வெங்காயம் எட்டு கிராம், மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, தேங்காய் பத்து கிராம் இவற்றை எண்ணெயில் வறுத்து சொர சொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் இரண்டு கிராம், சீரகம் இரண்டு கிராம், ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து, மேலே சொன்ன மசாலாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கால் ஆழாக்குத் தண்ணீரில் நான்கு கிராம் புளி, இரண்டு கிராம் உப்பு இவற்றைக் கரைத்து அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவைக் கரைத்து மீன் துண்டுகளை அதில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
பிறகு இரம்புச் சட்டியை அடுப்பில் வைத்து முப்பது கிராம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலா தண்ணீரில் இருக்கும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தண்ணீரை உதறி விட்டு எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum