சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு
Page 1 of 1
சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு
* மஞ்சள் பூசணி – 2 கீற்று
* மணத்தக்காளி வற்றல் – ஒரு மேசைக்கரண்டி
* பெரிய வெங்காயம் – ஒன்று
* புளி - எலுமிச்சையளவு
* கறிவேப்பிலை - ஒரு கீற்று
* கடுகு - தாளிக்க
* முதல் அரைப்புக்கு தேவையானவை:
* தக்காளி - ஒன்று
* இஞ்சி – சிறுத் துண்டு
* பூண்டு – 2 பல்
* மிளகு - ஒரு தேக்கரண்டி
* சீரகம் - ஒரு தேக்கரண்டி
* சாம்பார்த்தூள் – ஒரு மேசைக்கரண்டி
* 2 வது அரைப்புக்கு தேவையானவை:
* தேங்காய் – 2 மேசைக்கரண்டி
* முந்திரிபருப்பு – 5
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பூசணியை தோல்
சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
முதல் அரைப்புக்கு தேவையான தக்காளி, மிளகு, சீரகம், சாம்பார்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து
எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டாவது அரைப்புக்கு தேவையான தேங்காய், முந்திரியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
அதன் பிறகு புளியை கரைத்து வடிகட்டி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்துக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மணத்தக்காளி வத்தலை போட்டு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம்
வதங்கியதும் முதல் அரைப்பான தக்காளி விழுதை ஊற்றி நன்கு வதக்கவும்.
இந்த தக்காளி விழுது கலவையுடன் நறுக்கின பூசணித் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
காய் பாதியளவு வெந்ததும் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அது பச்சை வாசனை போக கொதித்ததும் மணத்தக்காளி வற்றலை போடவும்.
குழம்பு ஒரளவுக்கு கெட்டியானதும் தேங்காய் அரைப்பை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி
இறக்கவும்.
சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி.
இளவரசி அவர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வத்தல் குழம்பு
» சுண்டைக்காய் வத்தல் குழம்பு
» சுவையான மிளகுக் குழம்பு!!!!
» சுவையான மிளகுக் குழம்பு!!!!
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» சுண்டைக்காய் வத்தல் குழம்பு
» சுவையான மிளகுக் குழம்பு!!!!
» சுவையான மிளகுக் குழம்பு!!!!
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum