சுவையான மிளகுக் குழம்பு!!!!
Page 1 of 1
சுவையான மிளகுக் குழம்பு!!!!
மிளகு உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. இது சளி, இருமல் ஆகியவற்றிற்கு மிகவும் சிறந்தது. மேலும் இந்த மிளகை குளிர்காலத்தில் குழம்பு வைத்து சாப்பிட்டால், உடலுக்கு சூடு கொடுக்கும். இது குழந்தை பெற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த பத்தியக் குழம்பு. அந்த மிளகுக் குழம்பை எப்படி செய்வதென்று பாருங்களேன்!!!
தேவையான பொருட்கள் :
மிளகு – 50 கிராம்
சீரகம் – 4 தேக்கரண்டி
தனியா – 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 3
புளி – சிறிது
பெருங்காயம் – சிறிது
கடுகு – சிறிது
கறிவேப்பிலை – 6 கொத்து
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய்யை விட்டு, எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.
பின் அவற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் இவை அனைத்தையும் போட்டு, அத்துடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின் கடுகு நன்கு வெடித்ததும் அதில் அரைத்த கலவையை சேர்த்து கிளர வேண்டும்.
கலவை நன்கு கொதித்து, கெட்டியாகி அதில் உள்ள எண்ணெய் ஆனது பிரியும் நிலையில் இருக்கும். அந்த சமயத்தில் இறக்கி விடவும்.
இப்போது சுவையான காரசாரமான மிளகுக் குழம்பு தயார்!!!
இந்த மிளகுக் குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான மிளகுக் குழம்பு!!!!
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» சுவையான மாங்காய் மீன் குழம்பு
» சுவையான செட்டிநாடு கோழி குழம்பு
» சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு
» சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு
» சுவையான மாங்காய் மீன் குழம்பு
» சுவையான செட்டிநாடு கோழி குழம்பு
» சுவையான மஞ்சள் பூசணி வத்தல் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum