தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருப்பு ரசம்

Go down

பருப்பு ரசம்  Empty பருப்பு ரசம்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:40 pm

*துவரம் பருப்பு – 1 / 4 கப்
*பூண்டு - 3 பல்
*சீரகம் - 1 1 / 4 தேக்கரண்டி
*மிளகு – 1 / 2 தேக்கரண்டி
*வர கொத்தமல்லி - 1 / 2 தேக்கரண்டி
*வர மிளகாய் – 1
*மஞ்சள் தூள் - 1 /4 தேக்கரண்டி
*தக்காளி – 1 /2
*புளி – நெல்லிக்காய் அளவு
*உப்பு - தேவையான அளவு
*கொத்தமல்லி தழை – சிறிது
*கடுகு - 1 /2 தேக்கரண்டி
*கருவேப்பிலை – சிறிது
*பெருங்காயத்தூள் - 1 /4 தேக்கரண்டி
*நெய் அல்லது எண்ணெய் – 1 தேக்கரண்டி


*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் வடித்துக் கொள்ளவும்.சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை பச்சையாக, தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
*பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.வரமிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்.புளியுடன், தக்காளியும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும் .கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
*பின் அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும்.இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின்பு பருப்பு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum