மார்பகப் புற்றுநோய்: இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை
Page 1 of 1
மார்பகப் புற்றுநோய்: இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை
மார்பகப்புற்றுநோய் வந்தவர்கள் இனி மார்பகத்தை நீக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதி நவீன ரேடியேசன் தெரபி முறையில் உறுப்புகளை அகற்றாமல் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேன்சர் வந்தால் எந்த உறுப்பில் கேன்சர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்சரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்சரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி என்று பெயர்.
புற்றுநோய் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்சரை குணப்படுத்தி விடலாம்.பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். கதிர்வீச்சினை (ரேடியேஷன்) சிறு சிறு குழாய்கள் மூலம் கேன்சர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர்வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர்.
இச்சிகிச்சை மார்பக கேன்சர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற புராஸ்டேட் கேன்சருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும். இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்-கேன்சர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.
குடும்பத்தில் தாய்க்கு மார்பகப்புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வந்தால் மிகச்சீக்கிரமாக வலுவாக வளரும். லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்றுநோய் வரலாம்.
அதனால் ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பகப் புற்று நோயா இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை
» மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு
» மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு
» மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு
» மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையேடு
» மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு
» மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு
» மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு
» மார்பகப் புற்றுநோய் விளக்கக் கையேடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum