காட்டுச் செல்லியம்மன் கோவில்
Page 1 of 1
காட்டுச் செல்லியம்மன் கோவில்
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரிய பாளையத்தம்மன் கோவிலில் இருந்து மேற்கே சுமார் 12.கி.மீ தொலைவில் உள்ளது செங்கரை. இந்தக் கிராமத்தின் வடக்கு எல்லையில் காட்டுச் செல்லியம்மன் கோவில் உள்ளது. செங்கரை கிராமம், ஒருகாலத்தில் வனப்பகுதியாக இருந்தது. வெள்ளைக்கார அதிகாரிகள் இங்கு வந்து வேட்டையாடுவது வழக்கம்.
ஒருமுறை, வேட்டையின் போது மான் ஒன்று தென்பட, சிப்பாய்கள் அதைத் துரத்தினர். தப்பியோடிய மான், அடர்ந்த புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது. சிப்பாய்கள் புதரை அகற்ற முற்பட்டனர். அப்போது புதருக்குள் இருந்து நாகம் ஒன்று வெளிப்பட்டது. படமெடுத்து ஆடிய நாகம், புதருக்குள் இருந்த ஒரு புற்றில் பதுங்கிக் கொண்டது.
உடனே, புற்றை இடிக்கத் தொடங்கினர். ஆனால் புற்றுக்குள் அம்மன் சிலை ஒன்று இருந்தது. அப்போது திடீரென அருள் வந்து ஆடிய பெண்ணொருத்தி, இந்த இடத்துல குடி கொண்டிருப்பது காட்டுச் செல்லிடா, உரல் உலக்கை சத்தம், பிள்ளையின் அழுகுரல் எதுவுமே என் காதில் விழக்கூடாது என்பதற்காகவே இந்த வனத்தில் இருக்கிறேன் என்றாள்.
இன்றும், அடர்த்தியாக படர்ந்திருக்கும் வேதக் கொடியின் நிழலில்தான் அமர்ந்திருக்கிறாள் அம்மன். அம்மனுக்கு நித்திய பூஜைகள் உண்டு என்றாலும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெருங்கூட்டம் கூடுகிறது. மாலை 6 மணிக்கு மேல் கோவில் வாசலில் எவரும் இருக்கக் கூடாது என்பது அம்மனின் உத்தரவு.
6 மணிக்கு மேல் அம்மனும் தேவலோக தேவதைகளும் இங்கு ஆடிப்பாடி வலம் வருவதாக ஐதீகம். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து, தங்களின் வசதிக்கு ஏற்ப 11, 51, 101 என்ற எண்ணிக்கையில் பெண்களுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால், திருமண தடை நீங்குவதாக நம்பிக்கை. குழந்தை வரம் இல்லாதவர்கள், இங்குள்ள திருக்குளத்தில் (ஒன்பது வாரங்கள்) மூழ்கி எழுந்து, ஈரத் துணியுடன் வந்து அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேலூர் செல்லியம்மன் கோவில்
» செழிப்பான வாழ்வளிப்பாள் செல்லியம்மன்
» செழிப்பான வாழ்வளிப்பாள் செல்லியம்மன்
» வேலூர் செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் காண முடியாத சப்த மாதர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum