சந்தோஷ ஆஞ்சநேயர் கோவில்
Page 1 of 1
சந்தோஷ ஆஞ்சநேயர் கோவில்
இவ்வுலகில் எப்போதுமே நன்மையும், தீமையும் இருந்து கொண்டே வருகிறது. கண்ணுக்கு தென்படுகின்ற தீமைகளையும், அநீதிகளையும் எதிர்த்து போராடுவதிலேயே ஒரு மனிதன் சர்வ வலிமை படைத்த வல்லவனாகின்றான். பிறர் தரும் தீங்குகளையும், துன்பங்களையும் சகித்து கொள்வான் என்றால், அவன் துறவிக்கு ஒப்பாகின்றான்.
உயர் நிலைக்கு அப்போதே அவன் தகுதி உடையவன் ஆகின்றான். இது கிரஹஸ்தனுக்கு பொருந்தாது. அவனுக்கு தீங்கு வருமானால் அவன் இறைவனைத்தான் நாட வேண்டும். இல்லற வாழ்வு வாழ்கின்ற ஒருவன் கடவுள் பற்று அதிகம் கொண்டவனாக இருக்க வேண்டும்.
அதில்தான் அவனுக்கு அமைதி கிடைக்கும். ஸ்ரீராமபிரான் சீதையை பிரிந்து மனம் வருந்தி அமைதி இல்லாமல் கானகத்தில் தேடி அலைந்து ஸ்ரீமுக பருவத்தில் நடந்து சென்று கொண்டு இருக்கையில், அவர் கண்ணுக்கு எதிரே பணிவும், பக்தியும், பரிவான வார்த்தையும் நிறைந்த அனுமானை பார்க்கிறார்.
அனுமானின் உருவ அமைப்பை பார்த்த மாத்திரத்திலேயே ஸ்ரீராமபிரானுக்கு சந்தோஷம் வந்து விட்டது. அனுமான் தன்னை பார்த்த அந்த நிமிடத்தில், அவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திய விதம் அவருக்கு மிகவும் அதிக மான சந்தோஷத்தை தந்தது. அப்போது முதல் ஸ்ரீராமபிரான் அனுமனை பிரிந்தது இல்லை.
அனுமானும் ஸ்ரீராமனை பிரிந்தது இல்லை. அப்படிப்பட்ட சந்தோஷ ஆஞ்சநேயர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடியில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் கோவில் கொண்டுள்ளார். இந்த மூர்த்தியை பார்த்த மாத்திரத்தில் மனதில் சந்தோஷம் எழுகிறது, மன அமைதி உண்டாகிறது.
சிற்ப சாஸ்திர விதிப்படி அருள்கூர்ந்த பார்வையும், சேவிப்பவர்களுக்கு ஆனந்தம் தரும் வல்லமையும் உண்டாகும் என்றும், துஷ்ட கிரகங்கள் இருப்பின் இந்த ஆஞ்சநேயரை பார்த்தால் அவைகள் யாவும் பறந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தீங்கு செய்பவர்களை தனது பராக்கிரமத்கை காட்டி சந்தோஷ ஆஞ்சநேயர் தண்டிப்பார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு கிரக தோஷம், சத்ரு தோஷம், சரீர தோஷம், வியாபார தோஷம், வாகன தோஷம், சங்க தோஷம், புத்திர ஹந்தான தோஷம், சித்தப்பிரமை, தம்பதி தோஷம், சாதுக்கள் தோஷம், சன்யாசிய தோஷம் ஆகிய அனைத்து தோஷங்களையும் இந்த ஆஞ்சநேயர் நீக்குகிறார்.
ஆஞ்சநேயருக்கு உகந்த தினங்களான வியாழன், சனிக்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறந்தது. சனிக்கிழமையில் வரும் ஏகாதசி திதி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களும் மிகவும் விசேஷமானவை. வியாழக்கிழமைகளில் வரும் கிருத்திகை நட்சத்திரம், மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரம் ஆகிய நாட்கள் இவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்கள்.
போக்குவரத்து வசதி:
திருச்சியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் லால்குடிக்கு மிக அருகில் உள்ள கல்லக்குடியில் இந்த கோவில் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்ல பஸ் வசதி உள்ளது.
எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்குச்செல்லலாம். திருச்சியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஞ்சநேயர் ஆலயம்
» விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
» நங்கநல்லூர் ஜெய் ஆஞ்சநேயர் கோவில்
» ஆஞ்சநேயர் காண்டம்
» இசைஞானியின் ’நாங்கள் கேட்டவை’ – ஒரு சந்தோஷ சங்கீதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum