தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேஷனைப் பெண்கள் விரும்புவது ஏன்?

Go down

பேஷனைப் பெண்கள் விரும்புவது ஏன்? Empty பேஷனைப் பெண்கள் விரும்புவது ஏன்?

Post  ishwarya Sat Feb 23, 2013 6:03 pm

பெண்களின் உணர்வுகளுக்கும், பேஷனுக்கும் தொடர்பு உண்டா? என்றால், `கண்டிப்பாக உண்டு' என்கிறார்கள், உளவியல் ஆய்வாளர்கள்!

எந்தவொரு பெண்ணுக்கும், தனிமையில் அல்லது பொது இடத்தில் மற்ற பெண்களுக்கு ஈடாக முன்னிறுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது. தன்னை அழகுப்படுத்திக் கொள்வதோடு மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் குணமும் அவர்களுக்கு இருப்பதால், மற்ற பெண்கள் அணியும் உடை, ஆபரணம் மற்றும் இதர விஷயங்களை கூர்ந்து கவனித்து, அவற்றை தாமும் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால்தான் பேஷன் பொருட்கள் அனைத்தும் பெண்களை நோக்கியே படையெடுக்கின்றன.

* பேஷன் உடைகள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் பெண்களை `ஸ்மார்ட்' ஆக மாற்றி விடுகின்றன என்று பெண்கள் நம்புகின்றனர். தங்களுக்கு ஒரு நல்ல இமேஜை உருவாக்கித் தருவதாகவும் நினைக்கின்றனர்.

* பேஷன் உடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை பயன்படுத்தும் இளம்பெண்கள், தாங்கள் போட்டோவிலும் அழகாக, `ஸ்மார்ட்' ஆக இருப்பதாக கூறுகின்றனர். தங்களுடைய மைனஸ் விஷயங்களை பேஷன் பிளஸ் ஆக மாற்றிவிடுவதாக நம்பப்படுகிறது.

* பேஷன் என்பது ஒருவரை பிரபலமாக்கிவிடும். பார்ட்டி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வித்தியாசமான பேஷன் உடைகளில் வருவோரை அனைவரும் கவனிப்பார்கள். மேலும் அனைவரும் இது குறித்து பேசிக் கொள்வார்கள். மேலும் அனைவருமே அழகாக உடை உடுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றனர்.

* மற்றவரை கவரும் வகையில், பேஷன் பொருட்களை பயன்படுத்துவோருக்கு புகழ் என்பது எளிதாக வந்தடைகிறது. அதேபோல் அனைவரும் ஷாப்பிங் என்ற விஷயத்தில் ஆர்வமாக உள்ளனர்.

* கவிஞர்கள், ஓவியர்கள், கலைப் படைப்புகளை உருவாக்குவோர் மற்றும் எழுத்தாளர்கள் அனைவரும் நேர்த்தியான உடையில் இருக்கும்போது சிந்தனைகளும் புதுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.

* பேஷன் என்பது இன்றைக்கு அனைத்து துறைகளிலும் அவசியமானதாக இடம்பெற்றுள்ளது. புதுமை விரும்பிகள் அனைவருமே பேஷனை கண்டிப்பாக விரும்புவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum