மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?
Page 1 of 1
மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?
தற்போது மலை தரிசனத்துக்கு மவுசு அதிகம் உள்ளது, கைலாஷ், சபரிமலை போன்ற கடினமான யாத்திரைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். திருப்பதியில் பாதை வசதி ஏற்படுவதற்கு முன், பக்தர்கள் மலையேறியே சென்றனர். சபரிமலையில் இப்போதும் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளது. நன்றாகப் பசித்த பிறகு சாப்பிட்டால் தான், உணவு உடலில் ஒட்டும் என்பார்கள். அதுபோல, கஷ்டப்பட்டு யாத்திரை செய்தால் தான் தரிசனபலன் பூரணமாக மனிதனுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே இறைவன் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கியிருக்கிறான். ஒரு காலத்தில் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலத்துக்கு போவது என்றால் மிகவும் கடினம். செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலை என்கிறார் சுந்தரர். சீபர்ப்பதம் என்பது ஸ்ரீசைலத்தைக் குறிக்கும். பர்வதம் என்றால் மலை. இதையே பர்ப்பதம் என்றார் சுந்தரர். ஸ்ரீ என்பதையே தமிழில் சீ என்றார். மலைக் கோயில்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இருந்தாலும், வலுவான உடல்நிலை உள்ளவர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். அதிக பலனை அடைவீர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum