கனவு பெண்கள்
Page 1 of 1
கனவு பெண்கள்
யெஸ், இவர்கள்தான் இந்தாண்டு ரசிகர்களின் கனவை நீக்கமற நிரப்பப் போகிறவர்கள்.
சில காரணங்களுக்காக தமிழ்ச் சினிமாவில் நடிப்பதை தவிர்த்திருந்த தமன்னாவுக்கு, ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை தமிழ் கூறும் நல்லுலகில் தொடங்குகிறார். என்றாலும் தெலுங்கில் வழக்கம் போல் முன்னணியில்தான் இருக்கிறார். இந்தியில் ‘ஹிம்மத்வாலா’வின் வெற்றியை பொருத்து குஷன் நாற்காலி கிடைக்கும். நடனத்தில் எப்படி நளினம் காட்ட வேண்டும் என்பதை வேறு லாரன்ஸ் புண்ணியத்தில் சென்ற ஆண்டு கற்றிருக்கிறாரா... நிச்சயம் புத்தாண்டு புத்துணர்ச்சியை அளிக்கும்.
சுடர் விட்டு எரியும் விளக்கும் காஜல் அகர்வாலின் கேரியரும் ஒன்றுதான். ராசியில்லா நடிகை என்ற அவப்பெயரை ‘துப்பாக்கி’ அழித்திருப்பதால், கோலிவுட்டில் வரிசையாக களம் இறங்கப் போகிறார். தெலுங்கு குறித்து சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே ரேஸில் இருப்பவர்தான்.
ஓடுகிற ரயிலில் பாய்ந்து ஏறியவர்கள் என ஹன்சிகாவையும், அமலாபாலையும் குறிப்பிடலாம். தட்டுத் தடுமாறியவர்கள் சென்ற ஆண்டு ஒரு நிலைக்கு வந்தார்கள். இந்த ஆண்டு, நிச்சயம் சிம்மாசனத்தில் அமர்வார்கள். ‘சிங்கம் 2’ ஹன்சிகாவுக்கும், பெயரிடப்படாத விஜய் படம் அமலாபாலுக்கும் ஹாட் கேக் ஆக அமையும்.
‘கபார் சிங்’ என்ற ஒரே படத்தின் வழியாக கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் இணைந்திருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ்ப் படம் எதையும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், தெலுங்கு, இந்தி என கால்ஷீட் நிரம்பி வழிகிறது.
மம்தா மோகன்தாசும், காவ்யா மாதவனும் மலையாளத்தை ரவுண்டு கட்டி அடிக்க தயாராக இருக்கிறார்கள். ராகினி, திவ்யா ஸ்பந்தனா, பாவனா ஆகியோர் கன்னடத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள்.
சமந்தா... சொல்லவே வேண்டியதில்லை. தொட்டதெல்லாம் பொன் என்பது போல் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிக் கொண்டிருக்கின்றன.
‘சுந்தர பாண்டியன்’, ‘கும்கி’ என வசீகரித்திருக்கும் லக்ஷ்மி மேனன், ஒருவேளை இந்த ஆண்டு முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணையலாம்.
இவர்கள் தவிர புதிதாக யாரேனும் லைம் லைட்டுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.மொத்தத்தில், ரசிகனின் கனவு வறட்சியில் வாடாது. ஊற்றும் வற்றாது. நீரூற்றவும், செடிகளை வளர்க்கவும் தேவதைகள் வருவார்கள், ஆசிர்வதிப்பார்கள். அது போதும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum