புடவை!!
Page 1 of 1
புடவை!!
பெண்கள் அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தை மாற்றியமைக்கும் தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகுக்காக மட்டுமே அமைந்தவை அல்ல; பல தடவைகளில் அவை பெண்கள் விரும்புவது போல தங்கள் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொள்ள உதவுகின்றன. உதாரணமாக, பெண்கள் அணியக் கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்கு வாட்டில் இருந்தால் உயராமான பெண்களும் குள்ளமான தோற்றத்தைப் பெறுவார்கள். புடவையின் கோடு நேர்வாக்கில் இருந்தால்
குள்ளமான பெண்களும் உயரமான தோற்றத்தைப் பெறுவார்கள்.
பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும் கழுத்திலும் மெல்லிய லேஸ்களை வைத்துக் கொண்டால் மிகவும் அழகாக இருக்கும். இவ்வாறு லேஸ் வைத்த சோளிகள் என்ன வண்ணத்தில் இருந்தாலும், எந்த புடவைக்கும் பொருத்தமாக இருக்கும்.
கடற்கரை போன்ற பொது இடங்களுக்குக் குடும்பத்துடன் செல்லும் போது, மிக நெருக்கமான கட்டம் போடப்பட்ட அழுத்தமான சாயம் கொண்ட
கைத்தறிச் சேலைகளை உடுத்த வேண்டும். அது எளிமை தவழும் கண்ணியமான தோற்றத்தை உண்டாக்கக் கூடும்.
கல்யாணம் போன்ற குடும்ப விழாக்களுக்குச் செல்லும் போதும், தேநீர் விருந்து போன்ற வைபவங்களுக்குப் போகும் போதும் ஜிகினா வேலை செய்த பகட்டான உடைகளை அணிந்தால் எடுப்பாக இருக்கும். அம்மாதிரி நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த புடவைகள் பெண்களின் இயற்கை வயதை மிகவும் குறைத்து காண்பிக்கும்.
பொருத்தமான உடை என்று எண்ணிக்கொண்டு பல பெண்கள் சற்றும் மாறுபாடு இல்லாத ஒரே வண்ணத்துப் புடவையும், சோளியும் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வர். இது அவ்வளவாக கவர்ச்சியாக இராது.
அணியும் புடவைகள் இலேசான வண்ணத்தில் அமைந்திருந்தால் சோளி அதே வண்ணத்தில் கனமான வண்ணமாகப்பார்த்து தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். சோளி இலேசான வண்ணமாக இருந்தால் புடவை பொருத்தம் பார்த்து உடையணிந்தால்தான் எடுப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கும்.
உடல் முழுவதும் கொடி கொடியான சித்திர வேலைப்பாடுகளும், அகலமான ஜரிகையும் அமைந்த பட்டுப் புடவைகள் திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகவும் உயர்வான, பெருந்தன்மையான தோற்றத்தை உண்டாக்கும் .
வெய்யில் காலத்தில் சோளியை இருக்கமாக அணியும்போது வியர்வை தோன்றி சோளியை நனைத்து விடுவதுண்டு. நனைந்த ஈரமான சோளியை அணிந்திருப்பது அசௌகரியமாக இருக்கும். பார்ப்பதற்கும் நன்றாக இராது. அத்துடன் வியர்வையினால் ஏற்படும் வாடையும் சங்கடமான உணர்வை தோற்றுவிக்கும். கோடை நாளில் மட்டும் சற்று தொள தொளப்பாக சோளி அணியலாம். கோடை நாளில் டெரீன் போன்ற செயற்கை நூல் ஆன சோளிகளைத் தவிர்ப்பதுதான் நல்லது. பருத்தி நூலால் ஆன மெல்லிய துணிகளே கோடை காலத்துக்கு ஏற்றவை. மில் துணிகளை விட கைத்தறித் துணிகள் கோடைக் காலத்துச் சூழ்நிலைக்கு ஏற்புடையனவாக இருக்கும். காலையிலோ, மாலையிலோ ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் நிச்சயம் பருத்தி நூலால் ஆன சோளியை அணிந்தால்தான் வசதியாகவும் இருக்கும் அழகாகவும் இருக்கும்.
வாசலின் போன்ற பொருள் ஒன்றை அழகு சாதனக்கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இளம்பச்சை நிறமாக இருக்கும்.சோளி அணிவதற்கு முன்னர் இந்த களிம்பை, சோளி மறைக்கும் இடங்களில் நன்கு தடவிப் பூசிவிட வேண்டும். அதன் பிறகு சோளி அணிய வேண்டும். அந்த கிரீம் தடவினால் வியர்வையே ஏற்படாது. அதில் கலந்துள்ள இலேசான நறுமணமும் மன உல்லாசத்தையும் அளிக்கும்.
மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகள், நாட்டிய நாடக நிகழ்ச்சிகள், சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது இலேசான வண்ணங்களில் உடுத்திக் கொண்டு, புடவை வண்ணத்துக்கு மாறுபட்ட இலேசான வண்ண சல்லாத்துணிப் போர்வையை மேலே போர்த்திக் கொண்டு சென்றால் காண கம்பீரமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பட்டுப் புடவை
» புடவை பூந்தோட்டம்
» புடவை சாத்தும் வழிபாடு
» புடவை தரும் அம்மன்
» பட்டு புடவை பராமரிப்பு...
» புடவை பூந்தோட்டம்
» புடவை சாத்தும் வழிபாடு
» புடவை தரும் அம்மன்
» பட்டு புடவை பராமரிப்பு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum