தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குட்டீஸ் உடை உலகம் AtoZ

Go down

குட்டீஸ் உடை உலகம் AtoZ Empty குட்டீஸ் உடை உலகம் AtoZ

Post  ishwarya Sat Feb 23, 2013 5:09 pm

குழந்தைகளுக்கான உடைகள் என்பது இன்று சிறுவணிகம் அல்ல. அது, பல மாடிக் கட்டிடங்களில் செயல்படும் சூப்பர் ஸ்டோர்கள் வரை பரவலாகி விட்டது. பெற்றோர் மனதில் மட்டுமின்றி குழந்தைகள் மனதிலும் பெயர், வண்ணம் உள்பட ஆழப்பதியும் அளவுக்கு விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சூப்பர் ஸ்டோர்களுக்கும் ஜவுளிக்கடைகளுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமை, தள்ளுபடி. பேன்டலூன்ஸ், குட்டான், மேக்ஸ் போன்ற ஸ்டோர்களில் தள்ளுபடியே கொஞ்சம் காஸ்ட்லிதான்! ‘பை 2 கெட் 3’, ‘4 டிரஸ் ரூ. 5 ஆயிரம்’ என பல்க் தள்ளுபடிகள். ஜவுளிக்கடைகளில் மாதம் ஒரு பெயரில் தள்ளுபடி செய்கிறார்கள். 5 முதல் 10 சதவிகிதம்.

சரி... சூப்பர் ஸ்டோர்களால் என்ன பாதிப்பு?

‘பாதிப்பொன்றும் இல்லை’ என்கிறார் ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி திருச்சி உசேன். ‘‘சூப்பர் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் டிசைன்கள் அடுத்த சில நாட்களில் லூதியானாவில் இருந்தும், மும்பையில் இருந்தும் வெளி மார்க்கெட்டுக்கு வந்து விடுகின்றன. காட்டனோடு பாலியஸ்டர் மிக்ஸாகி வருவதால் விலையும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு கடைக்கும் அதன் தன்மைக்கு தகுந்த வாழ்க்கைத் தரமுள்ள கஸ்டமர்கள் இருக்கிறார்கள். நிறைய சம்பாதிக்கும் இளம் தம்பதிகள்தான் சூப்பர் ஸ்டோர்களைத் தேடிப் போகிறார்கள். அதே நேரம், பிற தேவைகளுக்கு அவர்களும் ஜவுளிக் கடையை நோக்கித்தான் வருகிறார்கள்...’’ என்கிறார் உசேன்.

இப்போது சென்னையைத் தாண்டி கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி என அடுத்த கட்ட நகரங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன சூப்பர் ஸ்டோர்கள். ‘‘உலக அளவில் மார்க்கெட் விரிவடைந்து விட்டதால் தரத்திலும் டிசைனிலும் ஜவுளிக்கடைகளிலும் சர்வதேச தரங்கள் வந்து விட்டன. குறிப்பாக குழந்தைகளுக்கான உடைகளில் ஏகப்பட்ட டிசைன்கள். பெண் குழந்தைகளுக்கு வெஸ்டர்ன் லுக்கில் ஏகப்பட்ட உடைகள் வருகின்றன. திட்டமிடாமல் வருபவர்கள்கூட டிசைன்களில் லயித்து ஒன்றுக்கு இரண்டாக வாங்கிச் செல்வார்கள். சீசனுக்குத் தகுந்தவாறு உடைகளை தருவிக்கிறோம். காக்ரா ஜோளி, பிரின்டட் காட்டன் ஃபிராக், மிக்ஸ் அண்ட் மேட்ச், ஹராம் பேன்ட்-டிரைபல் பிரின்டட் டாப், ஈவ்னிங் கவுன், பையன்களுக்கு ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்கள், கேதரிங் பேன்ட், ஜமைக்கன் என ஏகப்பட்ட சம்மர் ஸ்பெஷல் வகைகள் வந்துள்ளன’’ என்கிறார் ஆரெம்கேவி நிறுவனத்தின் இயக்குனர் தனலட்சுமி.

பெரும்பாலான சூப்பர் ஸ்டோர்களில் 0 - 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே உடைகள் எடுக்க முடியும். ஜவுளிக்கடைகளிலோ, குடும்பத்தின் ஒட்டுமொத்தத் தேவைக்குமான உடைகளை ஒரே இடத்தில் வாங்கலாம். அதுவும் வாழ்க்கைத் தரத்துக்கு தகுந்த விலையில். ஆரெம்கேவியில் 6 - 13 வயது குழந்தைகளுக்கான காக்ரா சோளி ரூ.5,520. இதில் அங்குலம் அங்குலமாக டிசைன் வார்க்கப்பட்டுள்ளது. பிரின்டட் காட்டன் பிராக் ரூ.920. பாட்டியாலா செட் ரூ.3,500. காட்பிங்க் ஈவ்னிங் கவுன் 2,960 ரூபாய். பாக்கெட்டின் கனத்துக்கு தகுந்தவாறு வாங்கும் வகையில் 350 ரூபாய்க்கும்கூட உடைகள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் திருப்பூர்தான் குழந்தை உடைகளின் மிகப்பெரும் உற்பத்தித்தலம். இங்கிருந்து உலகம் முழுமைக்கும் உடைகள் அனுப்பப்படுகின்றன. சர்வதேசச் சந்தையில் சீனாவும் தாய்லாந்தும் பங்களாதேஷும் நமது போட்டியாளர் கள். சீனா, தாய்லாந்து தயாரிப்புகள் தரத்திலும் விலையிலும் குறைந்தவை. தையல்நுட்பம், டிசைன், டையிங் மற்றும் துணியின் தரம் ஆகியவற்றில் திருப்பூர் உடைகள்தான் நம்பர் 1. உலகம் முழுவதும் உள்ள வால்மார்ட், ஜேசி பென்னி, ஓட்டோ ஷாப்களை அலங்கரிப்பவை திருப்பூரில் தயாராகும் துணிகள்தான். இங்கிருந்து தயாராகி இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் துணிகள், அந்நாட்டு நிறுவனங்களின் முத்திரையோடு மீண்டும் இங்கு விற்பனைக்கு வரும் கொடுமையும் நடக்கிறது.
திருப்பூரில் தயாராகும் முதல்தர உடைகள் எதுவும் நம்மூர் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.

சில பிராண்டட் நிறுவனங்களில் கிடைத்தாலும் ‘எக்ஸ்போர்ட் குவாலிட்டி’ என்ற பெயரில் கொள்ளை விலை சொல்கிறார்கள். புதியம்புத்தூர், தளவாய்புரம், நந்தம், ஈரோடு, மதுரை, புத்தாநத்தம், சென்னை போன்ற பகுதிகளிலும் குழந்தைகள் உடைகள் தயாராகின்றன. காட்டன் மற்றும் பாலியஸ்டர் மிக்ஸிங்கில் தயாராகும் இத் துணிகள் அடித்தட்டு, நடுத்தர மக்களின் நிலைக்குத் தகுந்த விலையில் கிடைக்கின்றன. இப்பகுதிகளில் பெரிய உற்பத்தியாளர்கள் யாருமில்லை. இப்போது பாம்பே, டெல்லி, லூதியானா, கான்பூர், இந்தூர், கொல்கத்தா, அகமதாபாத் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு ஏராளமான குழந்தை உடைகள் வருகின்றன. குழந்தைகள் உடைகளில் சூப்பர் ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகளைத் தாண்டி இன்னொரு விதமான வணிகமும் இன்று வளர்ந்து வருகிறது. அது ஆன்லைன் வணிகம். அளவு, வண்ணம், மெட்டீரியல் என ஒவ்வொரு உடைக்கும் அதன் ஜாதகத்தை பதிவு செய்திருக்கிறார்கள். உடையை பெரிதாக்கிப் பார்க்க லென்ஸ் வசதியும் இருக்கிறது. இணைய வணிகம் மட்டுமே செய்யும் நிறுவனங்கள் அன்றி, சூப்பர் ஸ்டோர்களும் ஜவுளிக்கடைகளும் கூட இணைய வணிகம் செய்கின்றன.

தமிழகத்தில், சென்னை சில்க்ஸ், போத்தீஸ், ஆரெம்கேவி, குமரன் சில்க்ஸ் போன்ற ஜவுளிக்கடைகளும் ஆன்லைன் வசதி வைத்திருக்கிறார்கள். வெப்சைட்டை திறந்ததும் சைஸ் வாரியாக கடைகளில் இருக்கும் அத்தனை டிசைன்களும் திரையில் விரிகின்றன. பிடித்த உடையை க்ளிக் செய்து, ஆர்டர் கொடுத்தால் உடனே கொரியரில் அனுப்பி விடுவார்கள். ‘‘வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிகின்றன. வெளிநாடுகளுக்கு 4 நாட்களில் டெலிவரி செய்கிறோம். இந்தியாவிலோ இன்று ஆர்டர் செய்தால் நாளையே கிடைத்து விடும் என்கிறார் சென்னை சில்க்ஸ் ஆன்லைன் பிரிவு மேலாளர் ரவிஷங்கர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum