வலங்கைமான் மாரியம்மன் கோயில்
Page 1 of 1
வலங்கைமான் மாரியம்மன் கோயில்
கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் எளிய தோற்றமுடன் அமைந்துள்ளது வலங்கைமான் மாரியம்மன் ஆலயம். நோய்வாய்ப்பட்டோர் மாரியம்மாவிடம் சென்று வழிபடுகிறார்கள். என் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடைமீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்.
பங்குனிமாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடை பெறும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடைமீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக்கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார்.
வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும். இதனால் இந்த அம்மன் பாடைகட்டி மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த பாடை கட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.
அப்போது வலங்கைமான் நகரமே திருவிழா கோலமாக காணப்படும். அதுபோல ஆவணி மாதம் கடைசி ஞாயிறு தெப்ப உற்சவம் நடைபெறும். நவராத்திரியை முன்னிட்டு இத்தலத்தில் 10 நாட்கள் விழா நடத்தப்படும். அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். அங்குள்ள மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளிவாள்.
அம்பாளுடன் கொலுவும் இடம் பெறும். அவற்றுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். 9-வது நாள் அம்பு போடும் நிகழ்ச்சி நடை பெறும். 10-வது நாள் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடத்தப்படும். நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்தால் மாரியம்மன் மனதில் இடம் பிடிக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தந்தி மாரியம்மன் கோயில்
» தந்தி மாரியம்மன் கோயில்
» சமயபுரம் மாரியம்மன் கோயில்
» தந்தி மாரியம்மன் கோயில்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum