தந்தி மாரியம்மன் கோயில்
Page 1 of 1
தந்தி மாரியம்மன் கோயில்
லகிரி மாவட்டம் ஊட்டிக்கு முன்னதாக அமைந்துள்ளது குன்னூர். இங்கு கோவில் கொண்டுள்ள மாரியம்மன் `தந்தி மாரியம்மன்' என்று அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் குளிர்ந்த அடர்ந்த காடாக இருந்த இந்தப்பகுதியை ஆங்கிலேயர்கள் சிறிய ஊராக இதை அமைத்தனர். சிறிய ஊராக இருந்தபடியால் இவ்வூர் `குன்னூர்' என அழைக்கப்பட்டது.
இந்த நகரமாக குன்னூர் மாறிவிட்டாலும் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர்.
ஒருமுறை குதிரை லாயத்தின் காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் கண்டார். கூர்ந்து பார்த்தபோது, சிறுமி ஒருத்தி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார்.
மறுநாள், இத்தகவலை மக்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை. மறுநாளும் இரவில் அவர் அதே காட்சியைக் கண்டு அதிர்ந்துபோன காவலாளி, மறுபடியும் ஊர் மக்களிடம் அதுபற்றி கூறினார். அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய மக்கள் அனைவரும் அன்றைய தினம் இரவில் குதிரை லாயத்தில் தங்கினர்.
காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர். அன்று இரவு அப்பகுதி பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன், தான் சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாகவும், தன்னை வழிபட்டு வருமாறும் கூறினாள். அதன்பின், மக்கள் அம்பிகைக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர்.
இங்குள்ள அம்மன் சுயம்பு மூர்த்தியாகவே அருள்பாலிக்கிறார். அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது. இங்கு அம்பாளுக்கு கோவில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் தந்திக்கம்பம் ஒன்றினை இந்த இடத்தில் நட்டனர். இதனால், இங்கிருக்கும் அம்பாள் முற்காலத்தில் `தந்தி மாரியம்மன்' என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
இப்போதும் அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இந்த அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை செய்கிறார்கள். குன்னூரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்போது இந்த தந்தி மாரியம்மனை மனமுருகி வணங்கினால் பெய்யாத மழையும் பெய்யும் என்கிறார்கள்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தந்தி மாரியம்மன் கோயில்
» தந்தி மாரியம்மன் கோயில்
» வலங்கைமான் மாரியம்மன் கோயில்
» சமயபுரம் மாரியம்மன் கோயில்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum