மங்கள மஞ்சள்
Page 1 of 1
மங்கள மஞ்சள்
முதலில் மங்களரமான மஞ்சளில் இருந்து ஆரம்பிபோம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. அதனாலேயே எந்த ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னும் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள்.
வேரிலிருந்து விளையக் கூடியது மஞ்சள். உடலில் உள்ள பல நோய்களைக் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. குறிப்பாக சளி, இருமல் தொல்லை இருந்தால், பாலில் மஞ்சள் பொடி கலந்து சாப்பிடலாம். மூக்கில் அதிகமாக நீர் வடிந்தால், மஞ்சளை தீயில் வாட்டி அதன் புகையை நுகர்ந்தால், உடனடியாக பலன் கிடைக்-கும்.
எந்தவொரு பிரச்சனை உடலில் ஏற்பட்டாலும் அது முகத்தில் தெரியும். கல்லீரலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் முகத்தில் கரும்புள்ளி தோன்றும். திடீரென மங்கு தோன்றுவது உடலில் உள்ள பாதிப்பாலும், நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாலும்தான்.
அந்தக் காலத்தில் உடலின் மேற்பததில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, வீக்கத்திற்கு மஞ்சள் பத்து போடுவார்கள்.
கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு, விளக்கெண்ணையுடன் மஞ்சள் கலந்து பூசுவார்கள்.
அப்பொழுதெல்லாம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அழகுக்காக மட்டுமில்லை. முகத்தில், கை, கால்களில் வளரும் வேண்டாத ரோமங்களையும் அகற்றத்தான்.
மஞ்சள் உடலில் பூசுவதாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் மலேரியாவைப் பரவச் செய்யும் கொசுக்கள் கடிப்பதில்லை என்று 1945&ம் ஆண்டு இந்திய மெடிக்கல் கெஜட்டில் வந்தது.
மஞ்சளில் இரு வகைகள் உண்டு. விரலி மஞ்சளைப் பொதவாக சமையலுக்கு அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். நல்ல நிறத்தையும் கொடுக்கக்கூடியது.
கஸ்தூரி மஞ்சள் என்பது கலர் இல்லாதது. குளியல் பொடியுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்தால் வாசமாக இருக்கும். அழகு நிலையங்களில், கஸ்தூரி மஞ்சளைப் பொதுவாக முகத்திற்குப் போடும் பேக்கிற்கு உபயோகப்படுத்துவோம்.
முன்பு, இயற்கை உரங்கள் போட்டு எல்லாமே விளைந்தன. தற்பொழுது இரசாயனக் கலப்பு மிகுந்த பூச்சி கொல்லி மருந்து உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் சருமப் பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் கொடுகிறது.
பியூட்டி டிப்ஸ்
மஞ்சளை நேரடியாக சருமத்தில் தடவக்கூடாது. தேங்காய் எண்ணெயை முதலில் லேசாகத் தடவி விட்டுப் பின் மஞ்சளைத் தேய்க்க வேண்டும். அடிக்கடி மஞ்சளை முகத்தில் தேய்த்தால் தோல் சுருங்க ஆரம்பித்துவிடம். சில வருடங்களிலேயே வயதான தோற்றம் வந்து விடும். சருமப் பாதிப்பும் ஏற்படும்.
சமீபத்தில் ஒரு பெண்மணி, பிறந்து சில மாதங்களே ஆன தன் குழந்தையை என் அழகு நிலையத்திற்கு எடுத்து வந்தார். அதன் நிறம் குறைவாக இருந்தது. மஞ்சளுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துப் பூசினால், நல்ல நிறம் கிடைக்கும் என்று ஒருவர் கூறினாராம். அதனால் அதைத் தேய்த்து, குழந்தையை சிறிது நேரம் வெளிலிலும் வைத்திருக்கிறார்.
அந்தக் குழந்தைக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, தோல் சாதாரண நிறத்திலும், முட்டையும் மஞ்சளும் தேய்த்த இடம், அதிகக் கறுப்பாகவும் ஆகியிருந்தது. எதற்காக இந்த சம்பத்தைக் கூறுகிறேன் என்றால், இந்தக் காலத்தில் இயற்கையில் விளையும் பொருட்களைக் கூட பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் கையாள வேண்டியது அவசியம்.
நம்மை அழகுபடுத்திக் கொள்ள அக்கறை காட்டாமல் இருப்பது நம்மையே அவமதிப்பது மாதிரி. நமது உடலை ஒரு கோவிலாக நினைத்து அக்கறையுடன் அலங்காரம் செய்தால், தன்னம்பிக்கையும், வெற்றியும் தானே தேடி வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி
» தீப மங்கள ஜோதி நமோ நம!
» மங்கள கவுரி பூஜை
» தாமதித்த மங்கள நாணும் சடுதியில் கூடும் மெய்யே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum