காலி ஃப்ளவர் முட்டை ரோஸ்ட்
Page 1 of 1
காலி ஃப்ளவர் முட்டை ரோஸ்ட்
காலிஃப்ளவர் : பெரியது ஒன்று
முட்டை : 4
கார்ன்ஃப்ளக்ஸ் மாவு : மூன்று டீஸ்பூன்
தனிமிளகாய்த் தூள் : இரண்டு டீஸ்பூன்
உப்பு : தே.அளவு
எண்ணெய் : பொரிக்க
முட்டையை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி கலக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை உப்பு, அரை டீஸ்பூன் தனி மிளகாய்த் தூள் கலந்து மேலும் கலக்கிவிடவும்.
அடுப்பில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து சிறிது உப்புப் போட்டு காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். வெந்நீரில் ஐந்து நிமிடம் வைத்திருந்து பின் நீரை வடிகட்டி பூவை எடுத்து வைக்கவும்.
ஈரமில்லாத கிண்ணத்தில் கார்ன்ஃப்ளக்ஸ் மாவு, தனிமிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு அகல பேசினில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு கார்ன்ஃப்ளக்ஸ் கலவையைத் தூவவும், குலுக்கிவிட்டு மேலும் தூவவும் இவ்வாறாக எல்லா மாவும் எல்லாப் பூவுடனும் பூசினாற்போல் இருக்கும்படி செய்யவும்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் காய வைத்து காலிஃப்ளவர் துண்டுகளை முட்டைக் கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
குளிர் கால மாலை நேரங்களில் சூடாகவும், சுவையாகவும் உண்ண ஏற்றது இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum