கோடைகால கேரட் சூப்
Page 1 of 1
கோடைகால கேரட் சூப்
கேரட் - 400 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு 1
புதினா இலை - 5
கடைந்த பாலேடு - 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 3 கோப்பை
சீஸ் - 1 துண்டு
உப்பு, சர்க்கரை - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேக்கரண்டி
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
சூடான தண்ணீரில் கேரட்டைப் போட்டு 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து நடுத்தர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி குறைந்த தீயில் 2 நிமிடங்கள் நறுக்கிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
சுத்தமான மஸ்லின் துணியை எடுத்துக்கொண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறுக்கிய புதினா இலை ஆகியவற்றை அதில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.
பிரஷர்குக்கரில் 3 கோப்பைத் தண்ணீர் எடுத்துக்கொண்டு, வெங்காயம், கேரட் சேர்த்து பிறகு, கட்டிய மஸ்லின் துணிக்கட்டையும் அதில் போட வேண்டும்.
வெயிட் வைத்த பின் 6 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆறவிட்டு பின்னர் மஸ்லின் துணிக்கட்டை பிழிந்து எடுத்துவிட வேண்டும்.
மிக்ஸியில் காய்கறிகளை அரைத்து வலை கரண்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிறகு உப்பு சேர்க்க வேண்டும். கொதிநிலை வரும் வரை சூடாக்கவும்.
இடையே சீராக கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். மிளகுத்தூள், துருவிய சீஸ் சேர்த்துக் கொண்டு பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum