பனீர் மலாய் சம்சம்
Page 1 of 1
பனீர் மலாய் சம்சம்
பால் - 2 லிட்டர்,
சர்க்கரை - 100 கிராம்,
குங்குமப் பூ - 1 சிட்டிகை,
சீவிய பாதாம், பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன்,
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்.
பனீர்... ஒன்றரை லிட்டர் பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். பால் கொதிக்கும் போது அதில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேருங்கள். உடனே பால் திரியும். திரிந்த பாலை சாதாரண வடிகட்டியில் அல்லது ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, சமப்படுத்தி, அதன் மேல் ஒரு கனமான (தண்ணீர் உள்ள) பாத்திரத்தை 2 மணி நேரம் வைத்தால் பனீர் ரெடி.
அதைத் துண்டுகள் போடவும். கடைகளில் கிடைக்கிற பனீரையும் உபயோகிக்கலாம். மீதமுள்ள அரை லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி, குங்குமப் பூ சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் காய்ச்சி வைக்கவும். அதுதான் மலாய்.
100 கிராம் சர்க்கரையை 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒரு கம்பிப் பாகு வரும் முன் இறக்கி, சூடாக இருக்கும் போதே பனீர் துண்டுகளை அதில் போட்டு 2 மணி நேரம் ஊற விடவும். இது ஊறி இனிப்புடன் மிருதுவாக இருக்கும். இந்தத் துண்டுகளை மெதுவாக வடித்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி வைத்து, அதன் மேல் சுண்டக் காய்ச்சிய மலாயை ஊற்றி, அதன் மேல் சீவிய பாதாம், பிஸ்தா தூவிப் பரிமாறுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலாய் பேடா
» மலாய் குல்பி
» மலாய் சம் சம் ஸ்வீட்
» கோகனட் மலாய் கோஃப்தா
» மிக்சட் ஃப்ரூட்ஸ் மலாய் ரைஸ்
» மலாய் குல்பி
» மலாய் சம் சம் ஸ்வீட்
» கோகனட் மலாய் கோஃப்தா
» மிக்சட் ஃப்ரூட்ஸ் மலாய் ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum