கிருஷ்ண சீடை
Page 1 of 1
கிருஷ்ண சீடை
அரிசி மாவு - ஒரு கப்
வெல்லம் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - சிறிது
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும்.கடாயில் அரிசி மாவையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம்.ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு அதில் வெல்லத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.
அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கடாய் முழுவதும் பரப்பி இருக்குமாறு போட்டு பொரித்து எடுக்கலாம்.
குறிப்பு : கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து வழிபடலாம். அதற்காகத்தான் இன்று இனிப்புச் சீடை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum