பாசிப்பருப்பு அல்வா
Page 1 of 1
பாசிப்பருப்பு அல்வா
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு - கால் கிலோ,
சர்க்கரை - அரை கிலோ,
நெய் - 200 கிராம்,
முந்திரி - 10,
திராட்சை - 20,
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். சர்க்கரையில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். அரைத்த பாசிப்பருப்பு விழுதை அதில் கொட்டி, கை விடாமல் நன்றாகக் கிளறி பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரைப் பாகை அதில் ஊற்றிக் கிளறவும். பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாமல், அல்வா சுருண்டு, திரண்டு வரும். நெய்யைக் கக்க ஆரம்பிக்கும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பருப்பு!
» பாசிப்பருப்பு சூப்
» பாசிப்பருப்பு சூப்
» பாசிப்பருப்பு முறுக்கு
» பாசிப்பருப்பு பக்கோடா
» பாசிப்பருப்பு சூப்
» பாசிப்பருப்பு சூப்
» பாசிப்பருப்பு முறுக்கு
» பாசிப்பருப்பு பக்கோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum