வாழைக்காய் பொடிக்கறி
Page 1 of 1
வாழைக்காய் பொடிக்கறி
என்னென்ன தேவை?
வாழைக்காய்&2, புளி&நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள்&அரை டீஸ்பூன்,
உப்பு&தேவையான அளவு.
வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய்&5, தனியா&ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு&ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், கொப்பரை துருவல் & ஒரு டீஸ்பூன், எண்ணெய்&ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு&அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு&ஒரு டீஸ்பூன், எண்ணெய்&2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை&சிறிது, பெருங்காயம்&அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வாழைக்காயை கழுவி இரண்டாக நறுக்குங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதி வந்ததும், வாழைக்காயைச் சேருங்கள்.
வாழைக்காய் முக்கால் பதம் வெந்ததும் எடுத்து தோலுரித்து, புட்டு துருவியால் துருவிக் கொள்ளுங்கள்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க
வறுத்து, பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வாழைக்காய், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி பொடியை
தூவி நன்கு கிளறி இறக்குங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum