ராகி கார சேவை
Page 1 of 1
ராகி கார சேவை
ராகி சேவை & ஒரு பாக்கெட், எலுமிச்சைச் சாறு & சிறிது, உப்பு, எண்ணெய் & தேவையான அளவு, நறுக்கிய பச்சை மிளகாய் & 2, துருவிய தேங்காய் & 1 டேபிள் ஸ்பூன், தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை.
ராகி சேவை இப்போது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. முதலில் ஒரு பாத்திரத்தில் சுமார் 8 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து, ஒரு பாக்கெட் ராகி சேமியாவை ஊற விடவும்.
(3 நிமிடத்திற்குள் தண்ணீரை வடிகட்டி விடவும். அதற்குமேல் ஊறினால் கூழாகி விடும்) தண்ணீரை வடிகட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின் சிறிது நேரம் ஆறவைத்து தாளிக்கவும்.
எப்படித் தாளிப்பது?
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் யாவற்றையும் வதக்கி சேமியாவை அத்துடன் சேர்த்து வதக்கி இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு: உடல் நலத்திற்கு சத்தான இந்த ராகி புட்டை நவராத்திரிக்கு வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இதையே காரத்தை தவிர்த்து விட்டு இனிப்பு புட்டாக வும் செய்யலாம். இதற்கு சர்க்கரை, பொடித்த ஏலக்காய், துருவிய தேங்காய் சேர்த்து செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum