ராகி பிஸ்கட்
Page 1 of 1
ராகி பிஸ்கட்
பிஜாப்பூர், உலகத்தையே ஈர்க்கும்
கர்நாடகத்துக்குக் கலைநகரம். அம்மக்கள், இந்நகரை புனித நகரங்களில் ஒன்றாக கருதுகிறார்கள். Ôநடமாடும் சிவன்Õ என்று போற்றப்படும் பசவண்ணர் பிறந்த பாக்கியவாடி கிராமம் இங்குதான் இருக்கிறது. இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றான 124 அடி உயர கோல்கும்பாஸ் கோபுரம் இருப்பதும் இங்குதான். இங்குள்ள ஹாயிவோலா கிராமத்தை கோயில் கிராமம் என்கிறார்கள். இங்கு மட்டும் பழமையான 15 கோயில்கள் உள்ளன. மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட பாதாமி, சிவா & விஷ்ணு கோயிலும் பிஜாப்பூரின் ஸ்பெஷல் அடையாளங்களில் ஒன்று.
ஆரம்பத்தில் இந்த ஊரின் பெயர் ÔவிஜயாபுராÕ என்றுதான் இருந்ததாம். ஆனால், ஆங்கிலேயர் நாவுக்குள் நுழைந்த ‘விஜயாபுரா’, ‘பிஜாப்பூராக’ வெளிவர, அதுவே நிலைத்து விட்டது.
இப்பகுதி மக்களின் உணவில் சோளம், ராகிக்கு முக்கிய இடமுண்டு. வறண்ட நிலம் என்பதால் இம்மண்ணில் இவ்வகை தானியங்களே விளைகின்றன. இப்பகுதியில் வசிக்கும் நாடோடி சமூகங்களைச் சேர்ந்த மக்கள், சோளரொட்டிக்கு சைடிஷ் ஆக Ôலவங்க மசாலாÕ என்ற வித்தியாசமான பொடியை பயன்படுத்துகிறார்கள். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பட்டை லவங்கம்.. இவற்றைச் சேர்த்து அரைத்து ஒரு துணியில் கட்டி தோளில் தொங்கவிட்டுக் கொள்கிறார்கள். சோள ரொட்டியைச் சுட்டு ஒரு சட்டியில் அடுக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். கிளம்பி விடுகிறார்கள். நிழல் கண்ட இடத்தில் அமர்ந்து சோளரொட்டியின் மேல் Ôபொடி மூட்டைÕயை உதறினால் ரொட்டியைச் சுற்றிலும் வாசனையான மசாலாத்தூள் பரவி
விடுகிறது. சற்று காய்ந்து கடினமாக இருந்தாலும் சத்தான, சுவையான உணவு அது.
ராகி நிறைய விளைவதால் அதுசார்ந்த சிறு தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் நிறைய உள்ளன. கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் ராகியை களியாகவோ, ரொட்டியாகவோ சாப்பிடும் நிலையில், பிஜாப்பூரில் மதிப்பூட்டி பல்வேறு துணைப் பொருட்களை உருவாக்குகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ராகி பிஸ்கட்.
இங்கிருந்து கர்நாடகம் முழுமைக்கும் ராகி பிஸ்கட் அனுப்பப்படுகிறது. லேசான துவர்ப்புடன், மிதமான இனிப்பும் சேர்ந்து நம்மூரில் கிடைக்கும் பேக்கிங் பிஸ்கட்டுகளை தோற்கடித்து விடுகிறது ராகி பிஸ்கட்.
இந்த பிஸ்கட்டுக்கு ராகிமாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், நெய், முந்திரி, பாதாம்பருப்பு ஆகியவை தேவை. ராகி மாவில், குறிப்பிட்ட விகிதத்தில் அனைத்தையும் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, செவ்வக வடிவில் வெட்டி, அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து தயாரிக்கிறார்கள். சூடாக, மொறுமொறு பதத்தில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கிறது. பேக் செய்து பாக்கெட்டாகவும் கிடைக்கிறது.
& வெ.நீலகண்டன்
படங்கள்: ரா.புருஷோத்தமன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டைமண்ட் பிஸ்கட்
» மைதா-எள்ளு பிஸ்கட்
» 100 வகை பிரெட், பன், பிஸ்கட், ஐஸ்க்ரீம்கள்
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
» கோதுமை மாவு பிஸ்கட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum