சர்க்கரை வரட்டி
Page 1 of 1
சர்க்கரை வரட்டி
மாற்றம் செய்த நேரம்:11/24/2011 11:26:09 AM
11:26:09
Thursday
2011-11-24
Stalingrad: Russian film goes 3D
MORE VIDEOS
*இனிப்புச் சுவைக்காக ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு இயற்கைப் பொருளை பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக தொல்தமிழர்கள் இலுப்பைப் பூக்களை வேகவைத்து அந்த நீரால் இனிப்பு செய்தார்கள். பனைமரத்தின் சாரை இனிப்புக்கு உபயோகிக்கும் வழக்கமும் இருந்தது.
*அதன் தொடர்ச்சிதான் கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு.இயற்கையாக தயாரிக்கப்படும் இதுபோன்ற இனிப்புகளால் எந்தக் கேடும் விளைவதில்லை என்பது அறிவியல்பூர்வமான உண்மை. ஆனால், இன்று இயற்கை இனிப்புகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அனைத்துமே ரசாயனக் கலப்பாக மாறிவிட்டது.
*சர்க்கரை வரட்டி என்னும் இனிப்பு அக்காலத்தில் கருப்பட்டி வரட்டியாகத்தான் இருந்தது. ஆனால், காலம் கருப்பட்டியை வெல்லமாக மாற்றிவிட்டது. சிலர் சர்க்கரை சேர்த்தும் செய்கிறார்கள்.கேரளத்து சகோதரர்கள் வீட்டில் சாப்பிட்டவர்களுக்குத் தெரியும்...
*எது இருக்கிறதோ இல்லையோ, இலையின் இடது பக்கமூலையில் கண்டிப்பாக சர்க்கரை வரட்டி வைப்பார்கள். முதலில் அதுதான் வாய்க்கும் போகும்... சுக்கும், ஏலமும் மணக்க, நாவில் நிறைந்து ருசி பரப்பும் சர்க்கரை வரட்டி நேந்திரம் வாழைக்காயில் செய்யப்படும் ஒரு பதார்த்தம்.
*Ôஅந்தக் காலத்தில நேந்திரம் பழம் சீசன் நேரத்தில மட்டும்தான் விற்பனைக்கு வரும். அதனால மக்கள் மொத்தமா வாங்கி எப்படியெல்லாம் பதப்படுத்தி வச்சுக்க முடியுமோ அப்படி வச்சுக்குவாங்க. சர்க்கரை வரட்டி நாலைஞ்சு மாசத்துக்குக் கெடாது. எங்க தாத்தா காலத்தில கருப்பட்டி போட்டுத்தான் வரட்டி பொரிப்பாங்க.
*சுக்கும், கருப்பட்டியும் மணக்க, சாப்பிடச் சாப்பிட தேடல் எடுக்கும். இன்னைக்கு எங்கே கருப்பட்டி கிடைக்குது. எல்லாம் கரும்பு வெல்லம்தான்..Õ என்கிறார் திருவனந்தபுரம் பழவங்காடி பகுதியில் சர்க்கரை வரட்டிக்குப் பெயர்போன Ôமகா சிப்ஸ்Õ உரிமையாளர் சிவகுமார்.கேரளா முழுவதும் சர்க்கரை வரட்டி கிடைக்கிறது.
*பண்டிகைகள், சுபகாரியங்களில் கண்டிப்பாக இது இடம்பெறும். உணவகங்களில் Ôசத்யÕவோடு இதைப் பரிமாறுகிறார்கள்.
*நன்கு விளைந்த நேந்திரம் வாழைக்காய் & 2
*வெல்லம் & 400கிராம்
*சுக்கு & 75 கிராம்
*ஏலக்காய் & 25 கிராம்
*தேங்காய் எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு.
*வாழைக்காயின் தோலை சீவிவிட்டு, நான்கு துண்டுகளாகக் கீறி டைமன் ஷேப்பில் வெட்டிக் கொள்ளுங்கள். ஏலம், சுக்கை பொடித்துப் போட்டு வெல்லத்தை பாகுகாய்ச்சி, அடியில் தங்கிய துகள்களை அரித்து எடுத்து விடுங்கள்.
*தேங்காய் எண்ணெயில் வாழைக்காய்துண்டுகளை சிவக்கப் பொரித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது, சிறிதாக வெல்லப் பாகை ஊற்றி ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு நன்கு கிளறுங்கள்.
*பின்னர் சிறிது நேரம் நிழலில் உலரவிட்டுச் சாப்பிடலாம். 6 மாதம் வரை கெடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சக்கை வரட்டி
» சர்க்கரை பொங்கல்
» தித்திக்கும்... சர்க்கரை பொங்கல்
» சர்க்கரை நோய் பாதிப்பிற்கு...
» சர்க்கரை நோய் குறைய
» சர்க்கரை பொங்கல்
» தித்திக்கும்... சர்க்கரை பொங்கல்
» சர்க்கரை நோய் பாதிப்பிற்கு...
» சர்க்கரை நோய் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum