தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்கை வரட்டி

Go down

சக்கை வரட்டி                              Empty சக்கை வரட்டி

Post  ishwarya Thu Feb 21, 2013 5:13 pm

சக்கை இருந்தா மக்க(ள்) தேவையில்லை... என்று கேரளாவில் ஒரு பழமொழி உண்டு. அங்கு, வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கிறதோ இல்லையோ, சக்கைமரம் நிற்கிறது. சக்கை மயக்கு, சக்கை அவியல், சக்கைத் துவரன், சக்கைப் புளிக்கறி, சக்கைப்புட்டு, சக்கைப் பெரட்டி, சக்கைக்குரு பொறியல், சக்கை உணக்கு
வற்றல், சக்கை நெத்தோலி, சக்கைக்கூனி என கேரள உணவு சக்கையைக் கொண்டாடுகிறது. அவ்விதமான பதார்த்தங்களில் சக்கைவரட்டி மிகவும் தனித்தன்மை வாய்ந்த இனிப்பு.

சக்கை என்றால் பலாப்பழம். வரட்டி என்றால் நம்மூரில் வேறு பொருள். ஆனால், கேரள மக்கள் வதக்குவதைத்தான் வரட்டி என்கிறார்கள். பலாப்பழத்தை வதக்கி உருவாக்கப்படும் ஒரு பதார்த்தம். பார்க்க கருப்பு அல்வா போல இருக்கும் சக்கை வரட்டி, சுவையில் பஞ்சாமிர்தத்தை நினைவுப்படுத்துகிறது.
பலாப்பழத்தின் தாயகம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை. இப்போது இந்தியாவுக்கு இணையாக இலங்கை, மலேசிய நாடுகளிலும் பலா விளைகிறது. நம்மூர் வேர்ப்பலாவைப் போல இலங்கையில் விளையும் தேன்பலா மிகவும் ருசியானது. யாழ்பாணத்து மக்களுக்கு பனை எப்படியோ, அந்த அளவுக்கு கொழும்பு மக்களின் வாழ்க்கையில் கலந்தது பலா. 1977களில் சிறீமாவோ பண்டாரநாயகா ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பஞ்சத்தை, மூன்று வேளையும் பலாக்காய்களை அவித்துச் சாப்பிட்டே ஜெயித்தார்கள் இலங்கை மக்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியாதான் பலா உற்பத்தி மண்டலம். தமிழகத்தில் பண்ருட்டி, கர்நாடகாவில் குடகு பகுதிகளில் பலா விளைகிறது. கேரளாவில் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு மண் கிடக்கும்
இடமெல்லாம் விளைந்து குவிகிறது பலா.
கூழைச்சக்கா, வரிக்கச்சக்கா என இரண்டுவகை பலாப்பழங்கள் அங்கு விளைகின்றன. கூழை, பழத்துக்கு தகாது. வற்றல், கறி வகைகளுக்கு பயன்படுத்தலாம். வரிக்கை மிகவும் தித்திப்பானது. செம்பருத்தி வரிக்கை, கற்பூர வரிக்கை, வேர்வரிக்கை, பூச்சி வரிக்கை, ரசவரிக்கை, ஆனவரிக்கை என வரிக்கையில் பலவகை இருக்கிறது. சக்கை வரட்டிக்கு செம்பருத்தி வரிக்கை, ரசவரிக்கையைப் பயன்
படுத்துகிறார்கள்.
நன்கு பழுத்த பழங்கள்தான் வரட்டிக்குத் தகுந்தது. சீசனில் மட்டுமே பலா கிடைக்கும் என்பதால் நெடுநாள் வைக்கத் தகுந்தார்போல் அதை பல்வேறு விதங்களில் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள். பழத்தை பாகோடு சேர்த்து வதக்கி வரட்டியாக்கினால் 2 மாதத்துக்கு வைத்துச் சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் 5 மாதம் கெடாது.
சக்கை வரட்டி கேரள இனிப்பகங்கள் அனைத்திலும் கிடைக்கிறது. குறிப்பாக, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை ஒட்டி, பழவங்காடி பகுதியில் உள்ள மகா சிப்ஸ்
என்ற கடை சக்கை வரட்டிக்குப் பெயர் போனது.
வயிற்றுக்குப் பாதகம் செய்யாத சத்தான இனிப்பு சக்கை வரட்டி.


பலாச்சுளை -1 கிலோ
வெல்லம் - அரைகிலோ
நெய் - 200 கிராம்
ஏலக்காய் - தேவையான அளவு


பலாப்பழத்தின் கொட்டைகளை நீக்குங்கள். வெல்லத்தை பாகு காய்ச்சி, அடியில் தங்கும் துகள்களை வாரி எடுத்து விடுங்கள். வாணலியில் லேசாக நெய் ஊற்றி பலாப் பழத்தைக் கொட்டி வதக்குங்கள். நன்றாக வதங்கிவரும் நேரத்தில் வெல்லப்பாகை ஊற்றி கிளறுங்கள். பாகும், பழமும் இரண்டறக் கலந்து கொதிக்கும் தருணத்தில் ஏலக்காய், நெய்யைப் போட்டு கரண்டியில் ஒட்டாத பதத்துக்கு வரும் வரையில் கிளறி, இறக்கிவிடுங்கள். சக்கை வரட்டி ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum