சர்க்கரை நோயாளிகளுக்கான பயிற்சிகள்
Page 1 of 1
சர்க்கரை நோயாளிகளுக்கான பயிற்சிகள்
சர்க்கரை நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அந்த நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.
அந்த உடற்பயிற்சிகள்:
1. கெண்டைக்கால் சதையை நீட்டுதல்:
முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள், சுவரில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்க வேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசைய வேண்டும். இந்த பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது.
2. நாற்காலி பயிற்சி
ஒரு நாற்காலியில் உட்கார வேண்டும். கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து உட்கார வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.
3. கால் வீசுதல்
ஒரு ஸ்டூலில் ஏறி நின்று கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஏதேனும் ஒரு பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஒரு காலை ஸ்டூலில் இருந்து எடுத்து முன்னும் பின்னுமாக வேகமாக ஆட்ட வேண்டும். இதுபோன்று 10 முறை செய்ய வேண்டும். இன்னொரு காலுக்கும் இதேபோல் பயிற்சி கொடுக்க வேண்டும்.
4. வாக்கிங்
தினமும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்கிங் செல்ல வேண்டும். வேகமாகவும் இல்லாமல், மிகவும் மிதமாகவும் இல்லாமல் ஓரளவுக்கு வேகமாக அதிக மூச்சு வாங்காமல் நடக்கவேண்டும். நடக்கும் தூரத்தைப் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்வது நல்லது.
5. மாடிப்படி பயிற்சி
பாதத்தின் முன்பகுதியை மட்டும் ஊன்றியபடி மாடிப்படிகளில் மிதமான வேகத்தில் ஏறி இறங்க வேண்டும். அவ்வாறு ஏறி இறங்கும்போது கவனம் தேவை.
6. நுனி விரல்கள் பயிற்சி
ஒரு நாற்காலியை பின்புறமாக நின்று பிடித்தபடி நின்ற இடத்திலேயே கால் விரல்களை மட்டும் உயர்த்தி பின்னர் தாழ்த்த வேண்டும்.
7. முழங்கால் வளைத்தல்
ஒரு நாற்காலியைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைக்காமல் நேராக வைத்துக்கொண்டு முழங்காலை 10 முறை மடக்க வேண்டும். இன்னொரு முறையிலும் இதேப் பயிற்சியை செய்யலாம். கால்களை நீட்டி தரையில் உட்கார வேண்டும். பின்னர் உள்ளங்கைகளைத் தரையில் பதித்து, சிறிது பின்னால் சாய்ந்தபடி உட்கார வேண்டும். காலை உயர்த்தி முன்னும், பின்னுமாகவும், பக்கவாட்டிலும் அசைக்க வேண்டும். கால் பிடிப்பு நீங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.
8. குதிகாலை உயர்த்துதல்
பாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதி காலை உயர்த்தி, அதாவது மேல்நோக்கி நின்றபடியே எழுந்து தாழ்த்த வேண்டும். இதுபோல் 20 முறை செய்யவேண்டும்.
பின்குறிப்பு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வயது, உடல்நிலைக்கு ஏற்றபடி இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். செய்ய இயலாத பயிற்சிகளை செய்ய வேண்டாம்.பயிற்சியை தொடங்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்
» நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்!!!
» நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய பானங்கள்!!!
» நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய பானங்கள்.
» எடை தூக்கும் பயிற்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum