டொமேட்டோ சாஸ் பாஸ்தா
Page 1 of 1
டொமேட்டோ சாஸ் பாஸ்தா
என்னென்ன தேவை?
பாஸ்தா - 200 கிராம்,
பெரிய தக்காளி - 5 முதல் 6,
வெங்காயம் - பாதி,
பூண்டு - 1 பல்,
லீக்ஸ் - 1 டீஸ்பூன்,
செலரி - 2 டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்,
பாஸ்தா சீசனிங் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வெங்காயம், லீக்ஸ், செலரி, பூண்டு ஆகியவற்றை மிகப்பொடியாக வெட்டவும். தக்காளியை தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, பிறகு 5 நிமிடங்கள் பச்சைத் தண்ணீரில் போட்டு, தோல் நீக்கி அரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு, சிறிது ஆலிவ் ஆயில் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், பாஸ்தாவை அதில் போடவும். பாஸ்தா நன்கு பிரண்டு, திரும்பக் கொதிக்கிற அளவுக்கு தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டியது அவசியம்.
20 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவடிகட்டவும். கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு லேசாக சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்க்கவும். பாஸ்தா சீசனிங் சேர்க்கவும். லீக்ஸ், செலரி சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெந்த பாஸ்தா, உப்பு சேர்த்து மிக மென்மையாகக் கிளறி விடவும்.
* மாலை நேர பார்ட்டி என்றால், முதல் நாளே இதைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடாக்கிப்
பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum